நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைகழகத்தின் மானுடவியல் துறை மற்றும் பல் மருத்துவத்துறையின் முனைவர் பட்ட மாணவர்கள் பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் எலும்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் முடிவுகழள் பிலோஸ் ஒன் (PLOS ONE) என்னும் பிரபல இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆய்வுக்குழுவின் தலைவர் பாவ்லா செரிட்டோ கூறுகையில், "இனப்பெருக்கம் பெண்களின் எலும்புகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருகிறது. குறிப்பாக, பிரசவத்திற்கு முன்பு, பின்பு என்று பெண்களின் எலும்பு மண்டலங்களில் நிரந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. எலும்பு மண்டம் என்பது நிலையானது கிடையாது.
மனித பரிணாம வளர்ச்சியின்படி எலும்புகள் முற்றிலும் மாறக்கூடியவையே. பொதுவாக எலும்புகள் உடலில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவை மூலம் மாறுதல் அடைக்கின்றன. இந்த கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் செறிவுகள் பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் உடலில் வியக்கத்தக அளவில் குறைத்துவிடுகின்றன. இந்த மாற்றங்கள் பிரசவம், பாலூட்டுதல், மார்பகங்கள் பெரிதாகுதல் உள்ளிட்டவை உடன் தொடர்புடையது. இடுப்பு எலும்பை இலகுவாக்கி குழந்தை வெளியேற்றத்திற்கும் வழிவகுக்கிறது. இது ஒட்டுமொத்த பாலூட்டிகளுக்கும் பொருந்தும்" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து நியூயார்க் பல்கலைகழக மானுடவியலாளர் ஷாரா பெய்லி கூறுகையில், எலும்புகள் என்பது நிலையானவை அல்ல. பல்லாயிரம் வருடங்களாக உடலியல் செயல்முறைகளுக்கு ஏற்றவாறு மாறுதல் அடைந்துவந்துள்ளன. சொல்லப்போனால், பெண்களின் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பின் எலும்புகளில் மாற்றம் நிகழ்வதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள உயிரியல் பூங்காவில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த ஆண் மற்றும் பெண் என 2 மனித குரங்குகளின் உடல்களில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த ஆய்வுகளில் பெண் குரங்கின் தொடை எலும்பு மற்றும் இடுப்பு எலும்புகளில் உள்ள லேமல்லர் திசுக்களின் வளர்ச்சி விகிதத்தில் பல்வேறு மாற்றங்கள் இருந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மானுடவியல் ஆராய்ச்சிக்கும் தொடக்கமாக அமைந்தது. அந்த வகையிலேயே பிரசவத்திற்கு முன்பு ஒரு பெண்ணின் லேமல்லர் எலும்பு திசுக்கள் எப்படி உள்ளன. அவை பிரசவத்திற்குப் பின் எப்படி உள்ளன என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டோம். அதில் பிரவத்திற்கு பின் பெண் உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றம் காரணமாக எலும்புகளில் கால்சியம், பாஸ்பரஸ், ஆக்ஸிஜன், மெக்னீசியம் மற்றும் சோடியம் குறைக்கின்றன. இதனால் எலும்புகள் தளர்தல், இடுப்பு எலும்புகள் கூடுதல் வலிமை பெறுதல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும். ஒரு சில பெண்களுக்கு பிரவத்திற்கு முன்பே இந்த மாற்றங்கள் ஏற்பட தொடங்குகின்றன எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மலேரியாவுக்கு எதிரான புதிய ஆன்டிபாடி சோதனை நிறைவு