ETV Bharat / sukhibhava

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தால் குழந்தையின் பேச்சாற்றல் அதிகரிக்கிறது - ஆராய்ச்சியில் ஆச்சரிய தகவல் - IQ

கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோனால் குழந்தைகளின் ஆரம்ப கால மொழியியல் வளர்ச்சி அதிகரிப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தால் குழந்தையின் பேச்சாற்றல் அதிகரிக்கிறது - ஆராய்ச்சியில் ஆச்சரிய தகவல்

author img

By

Published : May 21, 2023, 10:45 AM IST

வாஷிங்டன்: நிதானமாக இரு, எதற்கெடுத்தாலும் கோபப்படாதே, அதிர்ச்சியான செயல்களைப் பார்க்காதே, கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகாதே, பயப்படாதே என கர்ப்பிணிகளைக் கவனமாக இருக்கச் சொல்லும் அறிவுரைகளை நாம் நமது வாழ்வில் ஒரு முறையேனும் கேட்டிருப்போம். காரணம், தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை தாயின் உணர்வுகள் பாதிப்படைய செய்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.

ஆனால், இஸ்தான்புல்லில் நடைபெற்ற 25வது ஐரோப்பிய உட்சுரப்பியல் கூட்ட நிகழ்வில், இதற்கு சற்று மாறான ஆராய்ச்சி முடிவுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோனால், குழந்தையின் ஆரம்ப கால மொழியியல் வளர்ச்சி அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கர்ப்பிணிகளின் மூன்றாவது மாதத்தில் இந்த மன அழுத்தத்தை அதிகரிக்கச்செய்யும் கார்டிசோல் ஹார்மோனால் குழந்தையின் பேச்சாற்றல் மற்றும் மொழியியல் திறன், குழந்தையின் முதல் 3 ஆண்டுகள் கால வளர்ச்சியில் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் மூலம் கார்டிசோல் ஹார்மோனின் தாக்கம் கருவில் உள்ள குழந்தை மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பியல் அமைப்பு எவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை, அக்குழந்தையின் மொழியியல் திறனால் மதிப்பிட முடியும்.

இந்த கார்டிசோல் ஹார்மோனால், கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி குறித்து அறியலாம். ஓடென்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 12 முதல் 37 மாதங்கள் இடையில் உள்ள ஆயிரத்து 93 குழந்தைகள் மற்றும் அதே எண்ணிக்கையிலான மூன்று மாத கர்ப்பிணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆய்வில், 12 முதல் 21 மாதங்களைக் கொண்ட பெண் குழந்தைகள் அதிகப்படியான வார்த்தைகளையும், ஆண் குழந்தைகள் கார்டிசோல் அதிகரிப்பால் கருவில் இருக்கும்போதில் இருந்து, 12 முதல் 37 மாதங்களில் அதிக வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் அஞ்சா ஃபெங்கர் டிரெயர் கூறுகையில், “கருத்தரித்த நிலை மற்றும் குழந்தை பிறந்த பின்பு ஆகிய இரு நிலைகளில் கார்டிசோல் ஹார்மோன் குறித்து எடுக்கப்பட்ட முதல் ஆய்வு இதுவே. இதில் சந்ததியின் பாலினம் மற்றும் தாய் வழியாக கல்வி கற்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குழந்தை வளர்ச்சி மற்றும் கருவில் உள்ள குழந்தையின் கார்டிசோல் ஹார்மோனின் நிலைப்பாடு குறித்த ஆய்வில் உயர்தர ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆராய்ச்சிக் குழு, அடுத்தபடியாக அதிக கார்டிசோல் காரணமாக கருவில் உள்ள குழந்தையின் நுண்னறிவுத் திறன் (IQ) குறித்து ஆய்வு செய்ய உள்ளது. முன்னதாக, 7 வயது குழந்தைகளின் நுண்ணறிவுத் திறன் தொடர்பாக இக்குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது எனவும் மருத்துவர் ஃபெங்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சம்மரில் சருமம், தலைமுடியை பராமரிப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.