சிறுவயதிலிருந்தே நீங்கள் பிறரிடமிருந்து வேறுபட்டுத் தெரிவீர்கள். உங்களின் இடது கை பயன்பாட்டால் உங்களது பெற்றோர் உண்ண, எழுத என முக்கியமான வேலைகளுக்கு வலது கையைப் பயன்படுத்த அன்றாடம் வற்புறுத்தியிருப்பார்கள்.
இருப்பினும் நீங்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள்தான். சுருக்கமான சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் ஸ்பெஷல்தான். உங்களின் ஸ்பெஷாலிட்டி என்னவென்று பார்க்கலாமா?
கற்பனைத் திறன்
கற்பனைத் திறன் பலருக்கும் இருக்கும்தான். இருப்பினும் உங்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கும். கற்பனை, படைப்பாற்றலில் நீங்கள் நூற்றுக்கு நூறு வாங்கும் திறன் படைத்தவர்கள்.
பக்கவாதத்திலிருந்து விரைந்து குணமடைவீர்கள்
இடது கை பக்கவாதம் வந்த இடது கை பழக்கமுடையவர்கள் விரைவில் குணமடைந்து விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கான காரணம் தெரியாவிட்டாலும் பல இடது கை பழக்கமுடையவர்கள் இரண்டு பக்க மூளைகளையும் வலுப்படுத்தியுள்ளதால் விரைவில் குணமடைகிறார்கள் எனத் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில் இடது கை பழக்கமுடையவர்கள் இரண்டு கைகளையும் உபயோகப்படுத்த பழகியிருக்கின்றனர். இதன் காரணமாக ஒரு பக்க மூளையை பாதிக்கும் பக்கவாதத்திலிருந்து இவர்கள் விரைந்து மீள்வதாகக் கூறப்படுகிறது.
மாறுபட்ட சிந்தனை
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சைக்காலஜி என்னும் இதழில் வெளியான ஆய்வு ஒன்றில் இடது கை பழக்கமுள்ளவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதிகமான நோபல் பரிசு பெற்றவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், கட்டடக் கலைஞர்கள் பலர் இடது கை பழக்கமுடையவர்களே.
வித்தியாசமாக ஒலியைக் கேட்பீர்கள்
மூளையின் வெவ்வேறு பகுதிகளில் ஒலி வித்தியாசமாக செயலாக்கப்படுகிறது. இடது கை பழக்கமுடையவர்களுக்கு ஒலி வித்தியாசமாக உணரப்படுகிறது. வலக்கை பழக்கமுள்ளவர்களைவிட இவர்களுக்கு ஒலி மெதுவாகக் கேட்கிறது. இதனால் அவர்களுக்கு பேச்சு, இசையில் உள்ள நுணுக்கங்கள் தெளிவாகக் கேட்கிறது.
பெஞ்சமின் பிராங்கிளின், மைக்கேல் ஏஞ்சலோ, லியார்னடோ டாவின்சி போன்ற முக்கிய வரலாற்று சிறப்புமிக்க ஆளுமைகள் இடது கை பழக்கமுள்ளவர்கள்தான். இன்றைய உங்களது நாளில் நீங்களும் சிறப்பான நபராக வர ஈடிவி பாரத் சார்பாக வாழ்த்துகிறோம்.
இதையும் படிங்க: நீண்ட நேரம் பணி செய்வது இதயத்தைப் பாதிக்குமா?