ETV Bharat / sukhibhava

மழைக்காலம் வந்தாச்சு! வாங்க விதவிதமாக வெஜிடபிள் சூப் செய்யலாம்...

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 7:44 PM IST

soup recipes for winter season: மழைக்காலத்திற்கு ஏற்ப விதவிதமாக காய்கறி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காய்கறி சூப்
காய்கறி சூப்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்து, மழை கொட்டத் துவங்கியுள்ளது. இந்த மழைக்கு, சூடாகவும், குளிருக்கு இதமாகக் காரமாகச் சாப்பிட வேண்டும் என்றுதான் எல்லாரும் நினைப்பர். அதற்கேற்ற மாறி சூப் செய்து சாப்பிடலாம். சூப் என்றாலே நான்வெஜ் சூப் என்று நினைப்பது தவறு. அசைவ சுவையில் சைவ சூப்களும் செய்யலாம். எப்படிச் செய்வதென்று பார்க்கலாம்.

ப்ரக்கோலி காளான் சூப்:

தேவையானவை: 100 கிராம் ப்ரக்கோலி, 6 பட்டன் காளான்கள், 1 ஸ்பூன் எண்ணெய்,1 ஸ்பூன் சீரகம்

செய்முறை: ப்ரஷர் குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகத்தையும், மிளகையும் சேர்க்க வேண்டும் இவை பொரிந்தவுடன் நறுக்கிய ப்ரக்கோலி மற்றும் காளான்களைச் சேர்க்க வேண்டும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான சூட்டில் இவற்றை வதக்க வேண்டும். 2 நிமிடங்களுக்குப்பிறகு, 2 டம்ளர் சுடு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வைக்க வேண்டும். 2 விசில் வந்தபிறகு, குக்கரை இறக்கிவிட வேண்டும். ஆறிய பின், பிளண்டரை பயன்படுத்தி காய்கறிகளை மசிக்க வேண்டும்.இதை வடிகட்டியும் சாப்பிடலாம். அப்படியேவும் சாப்பிடலாம். சாப்பிடும் போது இதனுடன் ப்ரஷ் கிரீமையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ப்ரக்கோலி காளான் சூப்
ப்ரக்கோலி காளான் சூப்

காலிப்ளவர் பேபி கார்ன் சூப்:

தேவையானவை: 1 காலிப்ளவர், கால் கப் பேபி கார்ன், 1 வெள்ளை வெங்காயம், காஜுன் மசாலா (கருப்பு மிளகு, வெள்ளை மிளகு, கெய்ன் பெப்பர், வெங்காய பொடி, பூண்டு பொடி, மிளகாய்ப் பொடி) உப்பு, மிளகு தூள், 1 ஸ்பூன் வெண்ணெய்

செய்முறை: ஒரு வாணலியில் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் காலிப்ளவர் மற்றும் பேபிகார்னை சேர்த்து வதக்க வேண்டும், அதனுடன் காஜுன் மசாலா, உப்பு, மிளகு தூள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். இவை வதங்கியவுடன் ஒரு குவாட்டர் அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும். சரியாக வெந்தபின் கப்களில் பரிமாறி, சூடாகச் சாப்பிடலாம்.

கேரட் இஞ்சி சூப்:

தேவையானவை: கேரட் 2, இஞ்சி 2 இன்ஞ் அளவு, வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், பூண்டு, எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், பொடியாக வெட்டிய பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் கேரட்டை சேர்த்து வதக்க வேண்டும். 5 நிமிடங்களுக்குப் பிறகு நறுக்கிய இஞ்சியும், உப்பும் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது இதனுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, 1 ஸ்பூன் எலுமிச்சை சாறையும் சேர்த்து வேக விட வேண்டும். 15 நிமிடங்களுக்குப்பிறகு இதை இறக்கிவிட வேண்டும். ஆறியதும் இதை மிக்சியில் போட்டு அரைத்து, வடிகட்ட வேண்டும். அதனுடன் சிறிது மிளகு தூளைச் சேர்த்துக் குடித்தால் அருமையாக இருக்கும்.

கேரட் இஞ்சி சூப்
கேரட் இஞ்சி சூப்

ஸ்வீட் கார்ன் சூப்:

தேவையானவை: வேக வைத்த ஸ்வீட் கார்ன் 1 கப், பூண்டு, கேரட், சோள மாவு, வினிகர், சோயா சாஸ், மிளகுத்தூள், வெண்ணெய், உப்பு

செய்முறை: ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் வெண்ணெய்யைச் சேர்த்து, அதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட் சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் உப்பு, மிளகு, 1 ஸ்பூன் சோயா சாஸ், 1 ஸ்பூன் வினிகர் சேர்த்துக் கலந்து விட வேண்டும். அதன் பின் வேகவைத்த ஸ்வீட் கார்னை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும். சூப் கொதிக்க ஆரம்பிக்கும் போது, இதனுடன் சோள மாவு சேர்த்துக் கலக்க வேண்டும். கட்டிகள் ஏதும் உருவாகாத அளவிற்கு நன்றாகக் கலக்க வேண்டும். சோள மாவு கலந்த 2 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிவிட்டால் அவ்வளவு தான் சூப் ரெடி.

இதையும் படிங்க: முருங்கைக்காயில் இவ்வளவு நன்மைகளா?... என்னென்னனு தெரிஞ்சா அசந்தே போயிடுவீங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.