ETV Bharat / business

பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கு ஏற்றுமதி தடை நீக்கம்.. விவசாயிகள் மகிழ்ச்சி! - NON BASMATI WHITE RICE EXPORTS

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்கு விதிக்கப்பட்ட தடையை இன்று மத்திய அரசு நீக்கி, அதற்கான ஏற்றுமதி வரிக்கும் விலக்கு அளித்துள்ளது.

அரிசி கோப்புப் படம்
அரிசி கோப்புப் படம் (Credits-ETV Bharat)

டெல்லி: பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2023 ஜூலை 20ஆம் தேதி தடை விதித்தது. இந்நிலையில், இந்த தடையை மத்திய அரசு இன்று திரும்பப் பெற்றுள்ள நிலையில், இந்த பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கு மேல் விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரிக்கும் விலக்கு அளித்துள்ளது. அது மட்டுமின்றி, இந்த பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதி, தரை விலையாக ஒரு டன்னுக்கு 490 அமெரிக்க டாலர் என, இந்திய விலைப்படி ரூ.41,022.09 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (டிஜிஎஃப்டி), “பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கான ஏற்றுமதிக் கொள்கை திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கான தடையை நீக்கி ஏற்றுமதி வரிக்கும் விலக்கு அளித்துள்ளோம். இந்நிலையில், MEP (குறைந்தபட்ச ஏற்றுமதி விலை) டன் ஒன்றுக்கு USD 490க்கு என்ற விலை நிர்ணயம் அடுத்த உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவரமும், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையும்: மத்திய அரசின் குடோன்களில் ஏராளமான அரிசி இருப்பு உள்ளது. மேலும், இந்த பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் சில்லறை விற்பனை விலையும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து அரசு விலக்கு அளித்ததோடு, புழுங்கல் அரிசி மீதான வரியை 10 சதவீதமாக குறைத்துள்ளது.

இந்நிலையில், இதேபோல் பாஸ்மதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நீக்குவதற்கும் வரி குறைப்பு குறித்து 15 நாட்களுக்குள் மத்திய அரசு முடிவு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கான ஏற்றுமதிகளின் இடத்தில் பாஸ்மதி ஏற்றுமதியாக வாய்ப்புள்ளது.

இது ஒருபுறம் இருக்க, இது குறித்து வெள்ளிகிழமை (செப்.27) நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி மீதான ஏற்றுமதி வரி இதுவரை 20 சதவீதமாக இருந்தது. இந்த வரி மாற்றங்கள் செப்டம்பர் 27, 2024 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாத தொடக்கத்தில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் பாஸ்மதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசாங்கம் ரத்து செய்தது. இந்நிலையில், இந்த நிதியாண்டில் ஏப்ரல்-ஜூலை மாதங்களில் 189 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை நாடு ஏற்றுமதி செய்துள்ளது.

இது 2023-24ல் 852.52 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஏற்றுமதிக்கு தடை இருந்தபோதிலும், நட்பு நாடுகளான மாலத்தீவு, மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இருப்பும் தேவையும்: மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவற்றின் அரசாங்கங்களின் கோரிக்கையின் பேரிலும் ஏற்றுமதி அனுமதிகள் இந்திய அரசால் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த பாசுமதி அல்லாத அரிசி வகைகளின் இந்தியாவில் பரவலாக நுகரப்படுகிறது. மேலும் உலகளாவிய சந்தைகளில், குறிப்பாக அதிக இந்தியர் புலம்பெயர்ந்த நாடுகளில் தேவை உள்ளது.

இதையும் படிங்க: விலை குறையும் மின்சார வாகனங்கள்! சுமார் 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு!

ஏற்றுமதி அளவும் தரவும்: இந்த பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் 2023-24 ஆம் ஆண்டில், 17 நாடுகளுக்கு தயாரிப்புகளை ஏற்றுமதி செய்தது .அதில் பூட்டான் (79,000 மெட்ரிக் டன்), மொரிஷியஸ் (14,000 மெட்ரிக் டன்), சிங்கப்பூர் (50,000 மெட்ரிக் டன்), யுஏஇ (75,000 மெட்ரிக் டன்), நேபாளம் (95,000 மெட்ரிக் டன்), 1 ,90,000 மெட்ரிக் டன்) , Cote d'Ivoire (1,42,000 MT), கினியா (1,42,000 MT), மற்றும் மலேசியா (1,70,000 MT). மற்ற நாடுகள் பிலிப்பைன்ஸ் (2,95,000 MT), சீஷெல்ஸ் (800 MT), கொமரோஸ் (20,000 MT), மடகாஸ்கர் (50,000 MT), எக்குவடோரியல் கினியா (10,000 MT), எகிப்து (60,000 MT), கென்யா (1,00,000 MT), மற்றும் தான்சானியா (30,000 MT) ஆகும்.

உலக நாடுகளின் வேண்டுகோள்: அமெரிக்கா உட்பட உலக வர்த்தக அமைப்பில் (WTO)உள்ள சில உறுப்பு நாடுகள் இந்த பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் மீதான ஏற்றுமதி தடை நீக்க கோரிக்கை வைத்தனர் . ஆனால் அதற்கு இந்தியா பில்லியன் மக்களின் உணவுப் பாதுகாப்பு கருதி இந்த தடையை நீக்க முடியாது என அவர்கள் கோரிக்கையை நிராகரித்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா பல முறை இந்தியாவை ஏற்றுமதி தடையை முழுமையாக அமல் படுத்தவும் எந்த ஒரு நட்பு நாடுக்கும் ஏற்றமதி செய்வது தவறாகும் என்ற வாத்ததை முன்வைத்தது. ஆனால் அப்போது இந்தியா உலகில் போர் சூழல் நிலவதால் இதை செய்வதன் மூலம் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் வரும் விவசாயப் பொருட்களின் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் நெருக்கடிக்குள்ளாகப்படும் என வாதிட்டனர்.

இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் உணவு தானிய விநியோகச் சங்கிலியை சீர்குலைத்த காரணிகளில் ஒன்றாகும். இந்தியாவில் இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு வெங்காயத்தின் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை வரம்பை நீக்கியது, இதனால் இந்திய விவசாயிகள் பெரும் மகிழ்ச்சை அடைந்த நிலையில் தற்போது பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் மீது உள்ள ஏற்றுமதி வரியை நீக்கியுள்ளது விவசாயிகளை மேலும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits-ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.