ETV Bharat / state

துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்.. அரசியலில் கடந்து வந்த பாதை! - Udhayanidhi Stalin DCM - UDHAYANIDHI STALIN DCM

தமிழ்நாட்டின் துணை முதமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை பதவியேற்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2024, 9:58 PM IST

Updated : Sep 28, 2024, 10:23 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் துணை முதமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை பதவியேற்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் என்ட்ரி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு அரசியல் களத்திற்கு வந்தார். அதிமுகவையும், மத்தியில் உள்ள பாஜகவையும் கடுமையாக சாடி பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் மீது அரசியல் ரீதியான விமர்சனங்களும் எழத் தொடங்கின.

இதனை அடுத்து, தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிக்காக பிரச்சாரம் செய்த உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வலியறுத்தினர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வகித்து வந்த இளைஞரணி பொறுப்பு, அமைச்சர் உதயநிதிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலையில் வழங்கப்பட்டது.

முதல் முறையாக உதயநிதி எம்எல்ஏ: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி போட்டியிட விரும்புவதாகவும், அவர் அரசியலில் களமிறங்க இதுவே சரியான நேரம் என திமுக நிர்வாகிகள் பலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சட்டமன்றத் தேர்தலில் உதயநிதிக்கு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி ஒதுக்கப்பட்டது. பின்னர் உதயநிதி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

அமைச்சர் பதவி : தொடர்ந்து அரசு பணியையும், கட்சி பணியையும் பார்த்து வந்த உதயநிதி 2022 ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க : போட்றா வெடிய.. துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்!

துணை முதல்வர் : சமீபத்தில் அமெரிக்க பயணம் செல்வதற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க பல்வேறு கோரிக்கைகள் வலுத்துள்ளதே என்ற கேள்விக்கு "வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை" என பதில் அளித்தார். இதனால், இதுதொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக பார்க்கப்பட்டது. அதே சமயம், அதனை மறுக்கும்படியும் முதல்வரின் பதில் அமையவில்லை.

இதற்கிடையே, இதே கேள்வியை உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபோது, ''அது தொண்டர்கள் விருப்பம். அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சர் துணையாக தான் இருந்து வருகிறோம்'' என்றார். மேலும், ''அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி விவகாரத்திற்கு ‘ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்’ என்று தெரிவித்தார். அதன்படியே இன்று அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Sep 28, 2024, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.