சென்னை: தமிழ்நாட்டின் துணை முதமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை பதவியேற்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
இதில், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியில் வந்த நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. கொறடா கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன் , எஸ்.எம்.நாசர் ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அவர்களுக்கு நாளை பதவி வழங்கப்படும். எந்த துறை என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் நாளை அறிவிக்கப்படுகிறது.
முன்னதாக, பால்வளத்துறை அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட எஸ்.எம்.நாசருக்கு தற்போது மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கொறடா கோ.வி செழியன் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.ராஜேந்திரன் புதிதாக அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள்: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின் - நாளை பதவியேற்பு
அமைச்சர்கள் மற்றும் அவரது பதவிகள்:
- உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம்.
- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்
- நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றத் துறை அமைச்சராக நியமனம்.
- ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக மாற்றம்.
- வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றம்
- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பால்வளத்துறை மற்றும் காதி அமைச்சராக மாற்றம்.
- உயர்கல்வித்துறை புதிய aஅமைச்சராக கோ.வி.செழியனுக்கு வாய்ப்பு.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்