ETV Bharat / state

HRCE தணிக்கைத் துறையில் புதிய பணியிடங்களை ஏற்படுத்த பணியாளர் சங்கம் வலியுறுத்தல்! - Hrce audit department

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு புதிய பணியிடங்கள் ஏற்படுத்துவது போன்று தணிக்கைத் துறையிலும் புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்கள் அரசுக்கும், நிதித்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிரபாகரன்
பிரபாகரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை நிறுவனங்களின் தணிக்கைத் துறை பணியாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம், திருச்சியில் இன்று (செப்.28) மாநிலத் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து தணிக்கைத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் அலுவலர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில், புதிய தணிக்கை அலுவலகங்கள் மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவித்தல் தொடர்பான கோப்புகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால், இந்து சமய அறநிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய தணிக்கைகள் தேக்கமடைந்துள்ளது.

பிரபாகரன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

எனவே, இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு புதிய பணியிடங்கள் ஏற்படுத்துவது போன்று தணிக்கைத் துறையிலும் புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கைத் துறை அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்க, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கும், நிதித்துறைக்கும் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க : கேரளா ஏடிஎம் கொள்ளை; பிடிபட்டவர்கள் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு - மாவட்ட எஸ்பி விளக்கம்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகரன், "இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கைத் துறையில் புதிய பணியிடங்களை நிரப்பக் கோரி அமைச்சர் மற்றும் அரசிடம் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்வதாக இல்லை. இது அதிகாரிகளையும், தணிக்கைத் துறையையும் பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது.

அதேநேரம், தணிக்கைத் துறையினருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முழுவதுமாக செலவு செய்யாமல் அரசு முடக்கிவிட்டது. அரசின் மெத்தனப்போக்கால் தணிக்கை பணிக்கு தினசரி 120 கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டிய அவல நிலைக்கு அலுவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பணியாளர்களின் உடல்நலன் மற்றும் வயது மூப்பினை கருத்தில் கொண்டு, பணியாளர்களின் நலனைக் காக்க தமிழக அரசு முன் வர‌ வேண்டும்.

திருக்கோயில் சொத்துக்கள் முழுவதுமாக மீட்கப்பட வேண்டும். திருக்கோயில்களுக்கு வரும் உண்டியல் வருமானம் போதாது. மாறாக, திருக்கோயில் சொத்துக்கள் மூலம் மட்டுமே நிரந்தர வருவாய் ஈட்ட முடியும். அதேநேரம், தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது போன்று, வருவாயும் அதிகரித்துள்ளதால் இந்து சமய அறநிலையத்துறையில் 800 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்து சமய அறநிலையத்துறையின் நிதிமேலாண்மையைக் கவனிக்கும் தணிக்கைத் துறையில் போதிய மனிதவளம் இல்லாததால், இந்தத் துறை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அரசு இந்த துறையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.