ETV Bharat / sukhibhava

இதயத்திலும் பிளாஸ்டிக் துகள் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

Microplastics in human heart: இருதய நோய் தொடர்பான அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களின் இதய திசுக்களில் நெகிழி துகள்கள் (மைக்ரோபிளாஸ்டிக்) இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 11, 2023, 7:06 PM IST

சான் பிரான்சிஸ்கோ: இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள் பலரின் இருதய திசுக்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எனப்படும் சிறியவகை நெகிழி துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளனர். 5 மில்லி மீட்டருக்கும் சிறிதாகக் காணப்படும் இந்த நெகிழி துகள்கள் காற்றோடு கலந்து இருக்கும் நிலையில் வாய், மூக்கு, காது உள்ளிட்ட உடல் துவாரங்கள் வழியாக உள்ளே சென்று ரத்தம் மட்டும் இன்றி இருதயம் உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் தேங்குவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் கெமிக்கல் சொசைட்டி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், திசுக்களால் கட்டமைக்கப்பட்டுள்ள உடலில் காற்றில் இருந்து நெகிழி துகள்கள் உள்ளே சென்று கலப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட 15 நபர்களின் இருதய திசுக்கள் மற்றும் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ள நோயாளிகளிடம் இருந்து அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னுமாக ரத்தப் பரிசோதனை ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதையும் படிங்க: மன அழுத்தத்தில் ஆண், பெண் இடையே வேறுபாடு: ஆய்வு முடிவு கூறுவது என்ன?

இந்த ஆய்வில், பாலி எதிலீன் டெரெப்தாலேட், பாலி வினைல் குளோரைடு மற்றும் பாலி(மெத்தில் மெதக்ரிலேட்) உட்பட எட்டு வகையான நெகிழியில் இருந்து தயாரிக்கப்படும் 20 முதல் 500 நெகிழி துகள்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு நபரின் ரத்த மாதிரிகள் மற்றும் இருதய திசு பரிசோதனையில் நெகிழி துகள்களின் அளவும், வேறுபாடும் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய ஆய்வில் இருதயத்தில் உள்ள நெகிழி துகள்களின் அளவு கணிசமாகக் குறைந்து காணப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இருதய நோய் தொடர்பான அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களின் இதய திசுக்களில் நெகிழி துகள்கள் (மைக்ரோபிளாஸ்டிக்) இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான ஆய்வு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனவும் மருத்துவத் துறையில் இது மிகவும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உலகம் நீர், நிலம் மற்றும் காற்று மாசு என அனைத்து ரீதியாகவும் அசுத்தப்பட்டு வரும் நிலையில் வெளியே வீசப்படும் நெகிழி பொருட்களும் சரி காற்றில் கலக்கும் நெகிழி துகள்களும் சரி ஒட்டுமொத்த உயிர் மண்டலத்தையும் அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும் என்பதற்கு ஆய்வாளர்களின் இந்த ஒரு ஆராய்ச்சி மிக முக்கிய சான்றாக உள்ளது. இதை ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் புரிந்துகொண்டு சுற்று சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: BP மாத்திரைகளுக்கு குட் பாய்: ஐசோமெட்ரிக் உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.