ETV Bharat / sukhibhava

ரெம்டெசிவிர்: கள்ளச் சந்தையில் கரோனா சிகிச்சை மருந்துக்கு தங்கத்தின் விலை - ஈடிவி பாரத் கள ஆய்வு

அவசரகால பயன்பாட்டிற்கான ஒப்புதல் கிடைத்த சில வாரங்களுக்குள், கோவிட் -19 தொற்றுக்கு எதிரான உயிர்காக்கும் மருந்துகளில் ஒன்றான ‘ரெம்டெசிவிர்’, பேராசை கொண்ட மருந்து விற்பனையாளர்களுக்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் கள்ளச் சந்தையில் பணம் காய்க்கும் மரமாக மாறியிருக்கிறது. இதற்கான காரணம், அரசு உயர் அலுவலர்களின் அலட்சியம்தான். இதுகுறித்த உண்மைகளை வெளிக்கொணர ஈடிவி பாரத் நடத்திய ஆய்வின் தொகுப்பு...

author img

By

Published : Jul 19, 2020, 4:48 PM IST

remdesivir injection, ரெம்டெசிவிர்
remdesivir injection

மருந்து விற்பனையாளர்கள் இருவரிடம் இந்த ‘ரெம்டெசிவிர்’ மருந்து கிடைக்குமா என்று ஈடிவி பாரத் செய்திப் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்துள்ளனர். அவர்கள் தற்போது இருப்பு இல்லை எனக் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கோவிட்-19 நோயாளியின் உறவினரிடம் இதுகுறித்து கேட்டபோது, கள்ளச் சந்தையில்தான் இந்த மருந்து தற்போது கிடைக்கிறது என்றும், அதன் விலை தங்கத்தின் விலைக்கு நிகராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

டெல்லியைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனையில் (தேசிய தலைநகரில் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் பராமரிப்பு மையம்) தொழிலதிபர் ஒருவர் தனது உறவினரை கோவிட்-19 தொற்றின் காரணமாக அனுமதித்தார். கரோனா பரவல் பயங்கர வீரியத்துடன் பரவிவரும் நிலையில், அவரின் மருத்துவமனை அணுகல் அனுபவம், நாட்டில் நிலவும் மருத்துவ கள்ளச் சந்தை குறித்த கொடுமைகளை வெளிசத்துக்கு கொண்டு வந்துள்ளது.

உலகிலேயே மலிவான விலையில் கரோனா தடுப்பூசியை தயாரிப்பதுதான் நோக்கம்!

இந்தியாவில் அதிபயங்கர பரவல் நோய்க் கிருமியான கரோனாவால் 20 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 லட்சத்து 42 ஆயிரத்துக்கும்ம் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் உலகளவில் இறப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.2 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

remdesivir injection, ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர் மருந்து

கோவிட் -19 நோய்த் தொற்றுக்கான சிகிச்சையின் அவசரகால பயன்பாட்டிற்காக ஒரு சில மருந்துகளுக்கு மத்திய அரசு ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. கிலியட் சயின்ஸின் உரிமத்தின் கீழுள்ள ‘ரெம்டெசிவிர்’ மருந்திற்கு இந்திய மருந்து நிறுவனங்களான சிப்லா, ஹெட்டெரோ, மைலன் ஆகியவை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் ஒப்புதல்களைப் பெற்றுள்ள நிலையில், க்ளென்மார்க் ஃபேபிஃப்ராவிரை ‘ஃபேபிஃப்லு’ என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்ய ஒப்புதல் பெற்றுள்ளது.

சார்ஸ்-கோவ் -2 நோய்க் கிருமிக்கு எதிரான சிகிச்சைக்கு மிகச் சிறந்த மருந்தாக இது கருதப்படுவதால், மத்திய அரசின் ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கான ஒப்புதல் நோயாளிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஒரு பெரிய நிவாரணமாக வந்தது. ஆனால் அது போதைப் பொருள் கும்பலுக்கு ஜாக்பாட் அடித்ததுபோல், பணம் கொளிக்கும் தொழிலாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ZyCoV-D: மனித பரிசோதனைக்கு தயாராகும் கரோனா தடுப்பு மருந்து!

"ஜூலை மாத தொடக்கத்தில், என் உறவினர் ஒருவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு கோவிட்-19 தொற்றால் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் உறவினருக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து வழங்கப்பட வேண்டும் என்று கூறினர். உண்மையில், அது ஏற்கனவே அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. தற்போதைய தேவைக்கு இருப்பு இல்லையென்றும், இரண்டு மருந்து குப்பிகளை வெளியில் இருந்து நீங்கள் வாங்கிக் கொடுக்கவேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறினர்” என்று கோவிட்-19 நோயாளியின் உறவினர் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்ததை அடுத்து, ‘ரெம்டெசிவிர்’ மருந்தை தேடி அலைந்தேன். அங்கீகரிக்கப்பட்ட இரண்டு விற்பனையாளர்களை அணுகினேன். அதற்கு அவர்கள் நோயாளியின் ஆதார் அட்டை, மருத்துவர் பரிந்துரைச் சீட்டு, கோவிட்-19 தொற்று உறுதிபடுத்தப்பட்ட அறிக்கை ஆகியவற்றை கொண்டுவரும்படி அறிவுறுத்தியுள்ளனர். இந்தத் தரவுகளை கொடுத்தால்தான் 4,500 ரூபாய்க்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து கிடைக்கும் என்று கூறினர்.

remdesivir injection, ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர் கூறுகள்

“எதிர்பாராத விதமாக, நான் அணுகிய இரண்டு இடங்களிலும் மருந்து இருப்பு இல்லை என தெரியவந்தது. மேலும், கிடங்கிலும் மருந்து இருப்புகள் விரைவாக குறைந்து வருவதாகவும் தெரிவித்தனர்” என்று செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளியின் உறவினர் பதற்றத்துடன் கூறினார்.

“உறவினரின் வாழ்க்கை, உயிர் என்ற நெருக்கடியான மனநிலைக்கு தள்ளப்பட்டோம். இதனையடுத்து மருந்தை எப்படியாவது வாங்கி, அவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவுசெய்து, மருந்து எங்கு கிடைக்கிறது என்பது குறித்து வேறு மருந்து விற்பனையாளர்களை அணுகினோம். எங்களை புரிந்துகொண்ட சில முகவர்கள், கள்ளச் சந்தையில் மருந்து கிடைப்பதாகக் கூறினர்”

கோவிட்-19 தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் தடுப்பூசி!

“முதலில் கள்ளச் சந்தையில் மருந்தின் விலை 15,000 ரூபாய் என்று கூறப்பட்டது. மருந்து வாங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்ட மறுநாள் அதன் விலை 35,000 ரூபாயாக உயர்ந்தது. ஒரு சில நாள் கழித்து அதன் விலை 27,000 ரூபாய் என்றிருந்தது. ‘ரெம்டெசிவிர்’ மருந்து தங்கத்தின் விலையை விட ஏற்ற இறக்கங்களுடன் கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது” என்றார்.

remdesivir injection, ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர் மருந்து

அவரது உறவினர் இன்னும் அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால், அதன் பெயரை கூற மறுத்தார் அவர். மேலும், தன் அடையாளங்கள் வெளியே தெரியாமல், இந்த கள்ளச் சந்தை திருட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று நம் ஈடிவி பாரத் புலனாய்வுப் பிரிவிடம் நோயாளியின் உறவினர் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, குர்கான் ஆகிய மூன்று இடங்களில் மருந்தைத் தேடினோம். இந்த மூன்று இடங்களிலும் கள்ளச் சந்தையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து கிடைக்கிறது. ஆனால் தலைநகரின் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு விற்பனையாளர்களிடம் இந்த மருந்து கிடைக்கவில்லை. அப்போதுதான், அது பரவலான கறுப்பு சந்தைக்கு உட்பட்டதாகிவிட்டது என்பதை நான் உணர்ந்தேன்" என்று உறவினர் கூறினார்.

remdesivir injection, ரெம்டெசிவிர்
கரோனா நோயாளி (கோப்புப் படம்)

மருந்து தேவைப்படுபவர்கள் இரண்டு மணிநேரத்திற்கு முன்பாக தங்களின் தேவையை பதிவுசெய்ய வேண்டும் என்று மருந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கள்ளச் சந்தை மருந்து விற்பனையாளர்கள், மருந்துக்கு அதிகபட்ச விலை கொண்ட ரசீதைக் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

கோவிட்-19க்கு தடுப்பூசி உருவாக்கிவரும் ராக்ஃபெல்லரின் தொண்டு நிறுவனம்!

இவ்வேளையில் நோயாளியின் உறவினருக்கு முதலில் ரசீது கொடுக்க மறுத்துள்ளனர். அவ்வாறு மறுத்தபோது, ‘உங்கள் மருந்தை நான் எப்படி நம்புவது. தண்ணீரை ஊற்றி இந்த விலைக்கு நீங்கள் மருந்தை எனக்கு கொடுத்தால், நான் என்ன செய்வது’ என்று கேள்வியெழுப்பினேன். அதன்பின்னர் மருந்துக்கான ரசீதைத் தந்தனர். ரசீது நம்மிடம் இருந்தால், மருந்தின் நம்பகத்தன்மைக் குறித்து ஆய்வு செய்ய முடியும் என்று உறவினர் தெரிவித்துள்ளார்.

கள்ளச் சந்தை கொடூரர்களின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும்...

தனது உறவினருக்காக மருந்து வாங்க முயற்சித்த டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் தனது அனுபவத்தைக் குறித்துப் கூறுகையில், சில சூழலில் உயிரைக் காப்பாற்றுவதற்கான முன்னுரிமை இருப்பதால், என்னைப் போன்ற பலர் உயிர் காக்கும் மருந்துகளைப் பெறுவதற்கு கூடுதல் பணம் செலுத்துவது குறித்து யோசிக்க மாட்டார்கள் என்று கூறுகிறார். சாமானிய மக்களால் இதை வாங்க முடியாது என்பதால் பிரச்னையை எழுப்பி இதற்கு ஒரு முடிவுகட்ட நினைத்ததாக அவர் கூறினார்.

remdesivir injection, ரெம்டெசிவிர்
கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் (கோப்புப் படம்)

மேலும் அவர் தெரிவிக்கையில், கடவுளின் கிருபையால் என்னிடம் பணம் இருந்தது. அதனாலேயே என்னால் அம்மருந்தை வாங்க முடிந்தது. அப்படியேனும் மருந்தை வாங்கினால் கூட, என் மனசாட்சி என்னை உறுத்திக்கொண்டு இருந்தது. என்னால் அலுவல வேலைகளை பார்க்கமுடியாமல், சாமானிய மக்களுக்கு நேரும் அவலங்களை பார்த்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன் என்றார்.

இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன?

இறுதியில் ஹெட்டெரோ நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர்களிடமிருந்து இருந்து மருந்துகள் வாங்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

மருந்துகளின் கறுப்புச் சந்தையைக் கட்டுப்படுத்த தேவையான வழிமுறைகள் நாட்டில் இல்லை...

இதுபோன்ற முக்கியமான மருந்துகளின் விலையை சரிபார்க்க நாட்டில் எந்தவொரு பயனுள்ள நெறிமுறைகளும் இல்லை என்று அரசு உயர் அலுவலர்களிடம் கள்ளச் சந்தை மருந்து மாஃபியாக்கள் குறித்து கேள்வியெழுப்பிய சமூக வலைதளமான லோக்கல் சர்க்கிள் நிறுவனர் சச்சின் தபரியா, ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார்.

“இது டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் நடக்கிறது. மருத்துவமனைகள் நோயாளிகளின் உறவினர்களிடம், “எங்களிடம் இவ்வளவுதான் ரெம்டெசிவிர் உள்ளன, மீதம் தேவைப்படுவதை நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்,”என்று கள்ளச் சந்தைக்கு வழியனுப்புகின்றனர் என பிரபல மருத்துவமனைகள் மீது சச்சின் தபரியா குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.

remdesivir injection, ரெம்டெசிவிர்
கள்ளச் சந்தை மருந்து பொருட்கள்

மேலும், “ஒரு மருந்து விறபனையாளரை நீங்கள் அணுகினால் ‘ரெம்டெசிவிர்’ மருந்தின் விலையை 15,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை கூறும் அவர்கள், அதை இரண்டு மணிநேரத்தில் நம் கைகளுக்கு கொடுத்துவிடுவார்கள். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் சென்று கேட்டால், தங்களிடம் இருப்பு இல்லை எனக் கூறுவர். காரணம், கள்ளச் சந்தையில் மருந்துகளை முன்னரே விற்றிருப்பர்” என்று லோக்கல் சர்க்கிள் நிறுவனர் கூறினார்.

கரோனா வைரஸை எதிர்க்கும் பெல்ஜிய லாமா விலங்குகள்!

சச்சின் தபரியா புகாரைத் தொடர்ந்து, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் வி.ஜி.சோமானி, ‘ரெம்டெசிவிர்’ மருந்தில் கள்ளச் சந்தையின் பக்கங்களை அலசி ஆராயுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ள சோமானி, ரெம்டெசிவிர் மருந்தின் கள்ளச் சந்தையை கண்டறிந்து அழிக்க, அமலாக்கத் துறை அலுவலர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.