ETV Bharat / sukhibhava

Blood thinners: இதய நோயாளிகள் கவனத்திற்கு! - பிளட் தின்னர் மாத்திரை சாப்பிட்டால் இதில் கவனம் தேவை - பிளட் தின்னரால் ஏற்படும் பாதிப்பு

பிளட் தின்னர் மாத்திரைகளை பயன்படுத்துபவர்கள் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல், பிற மருந்துகளை சாப்பிடவோ, பக்க விளைவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Sukhibhava
பிளட்
author img

By

Published : Jun 20, 2023, 12:33 PM IST

ஹைதராபாத்: பொதுவாக மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் 'பிளட் தின்னர்'(Blood thinners) மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த மாத்திரைகள் ரத்தத்தின் உறையும் திறனை குறைக்கின்றன. ஆனால், நீண்ட காலமாக பிளட் தின்னர் மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், பிளட் தின்னர் மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். இவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்வருமாறு காணலாம்...

காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்: பிளட் தின்னர் மாத்திரைகளால் ரத்தத்தின் அடர்த்தி குறையும். இதனால் காயம் ஏற்படும்போது, ரத்தப்போக்கு உடனே நிற்காமல், தொடர்ந்து வெளியேறும். இதனால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே, பிளட் தின்னர் மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிபடும் வகையிலான உடற்பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக, நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற பாதுகாப்பான உடற்பயிற்சிகளை செய்யலாம். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

சரியான நேரத்தில் மாத்திரைகளை சாப்பிடுங்கள்: தினமும் சரியான நேரத்தில் மாத்திரைகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக தினமும் ஒரே நேரத்தில் மாத்திரைகளை சாப்பிட வேண்டும். ஏனெனில், சில மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் சரியாக வேலை செய்யாது. மாத்திரைகள் சாப்பிடுவதை மறக்காமல் இருப்பது நல்லது. அதேபோல், பிளட் தின்னர் மாத்திரைகளையும், பிற மாத்திரைகளையும் ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது.

கூர்மையான பொருட்களை கவனமாக பயன்படுத்துங்கள்: வீட்டில் தினசரி பயன்படுத்தும் கத்தி, கத்தரிக்கோல் போன்றவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். காரணம், சிறிய கீறல் கூட அதிக ரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும். அதேபோல், ஷேவிங் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். முடிந்தால், டிரிம்மரைப் பயன்படுத்தலாம். நகங்களை சதையுடன் மிகவும் நெருக்கி வெட்டக் கூடாது. வீட்டு வேலை செய்யும்போது சிறிய காயம் ஏற்பட்டாலும், ரத்தம் முழுமையாக நிற்கும்வரை அழுத்தமாக பிடித்துக் கொள்ள வேண்டும். ரத்தம் நிற்கவில்லை என்றால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

வைட்டமின் கே (Vitamin K): கீரை போன்ற பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் கே அதிகம் உள்ளது. வைட்டமின் கே அதிகமாக இருந்தால், வார்ஃபரின்(warfarin) போன்ற மருந்துகள் திறம்பட செயல்படாது. எனவே, வைட்டமின் கே எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

ரத்த பரிசோதனை செய்யுங்கள்: பிளட் தின்னர்களை எடுத்துக் கொள்ளும்போது, அடிக்கடி ரத்த உறைதல் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், தேவைப்பட்டால், மருத்துவர் மாத்திரைகளின் அளவை மாற்றலாம் அல்லது வேறு மாத்திரைகளை பரிந்துரை செய்யலாம்.

மருத்துவரிடம் கூறுங்கள்: ஒவ்வொரு முறை மருத்துவரை அணுகும்போதும், நீங்கள் பிளட் தின்னர் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை மறக்காமல் கூற வேண்டும். அப்போதுதான், அதற்கு ஏற்றார்போல் மருந்துகள் கொடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் முடியும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் பிளட் தின்னர் மாத்திரைகளின் பெயரை எழுதி பாக்கெட்டில் வைத்துக் கொள்வது நல்லது. அது அவசர காலங்களில் பயன்படும்.

பல் துலக்கும்போது கவனம் தேவை: நமது ஈறுகள் மிகவும் மென்மையானவை. அவை எளிதில் காயமடைந்து ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், பல் துலக்கும்போது மெதுவாக பல் துலக்க வேண்டும். மென்மையான பிரஷ்களை பயன்படுத்துங்கள். கடினமாக தேய்க்கக் கூடாது. பல் மருத்துவரிடம் செல்லும்போது, பிளட் தின்னர் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைக் குறிப்பிட வேண்டும்.

பக்க விளைவுகளை கவனியுங்கள்: பிளட் தின்னர் மாத்திரைகளை பயன்படுத்துவதால், சில நேரங்களில் ஈறுகளில் ரத்தக்கசிவு, தோல் அரிப்பு, மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். இதுபோல ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இதையும் படிங்க: கரோனாவுக்குப் பிறகு குழந்தைகள், கர்ப்பிணிகளிடையே சர்க்கரை நோய் அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.