ETV Bharat / sukhibhava

காகித ஸ்ட்ராவிலும் கலந்திருக்கும் நச்சு இராசாயனங்கள் : ஆய்வாளர்கள் கூறுவது என்ன? - plastic

Toxic Chemicals in Straws: பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை தவிர்த்து விட்டு காகித ஸ்ட்ராக்களை பயன்படுத்துகிறீர்களா.? அதிலும் இருக்கிறது ஆபத்து என்கிறார்கள் ஆய்வாளர்கள். காகித ஸ்ட்ராக்களில் ஏராளமான செயற்கை நச்சு இரசாயனங்கள் கலந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 2:46 PM IST

லண்டன்: ஜூஸ் கடை, இளநீர் கடை என எங்குப் பார்த்தாலும் காகித ஸ்ட்ராக்கள். பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தினால் புற்று நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்திலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அல்லது வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அந்த வகையில் சமீப ஆண்டுகளாக ஜூஸ் கடைகள், இளநீர் கடைகள் ஏன் மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு என அனைத்து இடங்களிலும் காகித ஸ்ட்ராக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை அடிப்படையாகக்கொண்டு குறு சிறு வியாபாரிகளும் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இதற்கு எல்லாம் முடிவு கட்டும் விதமாக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் காகித ஸ்ட்ராவிலும் ஏராளமான செயற்கை நச்சு இரசாயனங்கள் கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. PFAS எனப்படும் செயற்கை இரசாயனக்குழு இந்த காகித ஸ்ட்ராக்களில் கலந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதை நீண்ட நாள் பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கும் மனிதக் குலத்தின் ஆரோக்கியத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பா மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 39 வகையான காகித ஸ்ட்ரா பிரேண்டுகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அந்த ஆய்வில் பெரும்பாலான பேப்பர் ஸ்ட்ரா பிரேண்டுகளிலும் சுமார் 90 சதவீதம் PFAS எனப்படும் செயற்கை இரசாயனக்குழு கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக 18 வகையான இரசாயன குழுக்கள் அதில் காணப்பட்டுள்ளது. மூங்கில் ஸ்ட்ரா பிரேண்டுகளில் 80 விழுக்காடு இரசாயனங்களும், பிளாஸ்டிக் ஸ்ட்ரா பிரேண்டுகளில் 75 விழுக்காடு இரசாயனங்களும் , கண்ணாடி ஸ்ட்ரா பிரேண்டுகளில் 40 விழுக்காடு இரசாயனங்களும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஐந்து வகையான ஸ்டீல் ஸ்ட்ரா பிரேண்டுகளில் இரசாயனங்கள் காணப்படவில்லை எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் காகித மற்றும் மூங்கில் ஸ்ட்ராகள் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களோடு ஒப்பிடுகையில் சுற்றுச் சூழலுக்கோ அல்லது மனித உடலுக்கோ தீங்கு விளைவிக்காது என்ற அடிப்படையில் விளம்பரப்படுத்தப்படுவதாகக் கூறிய ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வாளர் திமோ க்ரோஃபென் அதை முழுமையாக உறுதி செய்ய முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், இந்த PFAS எனப்படும் செயற்கை இரசாயனக்குழு தைராய்டு, உடல் பருமன், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக புற்றுநோய் மற்றும் டெஸ்டிகுலர் புற்று நோய் உள்ளிட்ட பல உடல் நலப் பாதிப்புகளோடு தொடர்புடையதாக உள்ள நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு உலக நாடுகள் இந்த PFAS-க்கு தடை விதித்துள்ளது.

இந்த PFAS குறைந்த அளவில் பயன்படுத்தும் போது பேரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்ற போதிலும் மக்கள் இதை நீண்ட காலம் பயன்படுத்திக்கொண்டு வந்தால் பெரும் உடல் நல உபாதைகளுக்கு இது காரணமாக அமையும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர் மருத்துவர் க்ரோஃபென் கூறுகையில், காகித ஸ்ட்ரா, மூக்கில் ஸ்ட்ரா, கண்ணாடி ஸ்ட்ரா உள்ளிட்ட அனைத்திலும் PFAS இரசாயனங்கள் உள்ள நிலையில் மக்கள் அதை தவிர்த்துவிட்டு ஸ்டீல் ஸ்ட்ராக்களை பயன்படுத்துவது நல்லது எனவும் இல்லை என்றால் ஸ்ட்ராக்களின் பயன்பாட்டையே தவிர்ப்பது மேலும் சிறந்தது எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்; ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.