டெல்லி: இந்தியாவில் இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனையில் 40க்கும் மேற்பட்ட இருமல் தயாரிப்பு நிறுவனங்கள் தோல்வி அடைந்ததாகவும், இதற்கும் உலகளவில் 141 குழந்தைகளின் இறப்பிற்கு தொடர்புள்ளதாகவும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO)தெரிவித்துள்ளது.
இது தொட்ர்பாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) வெளியிட்ட அறிக்கையில், "மொத்தம் 1,105 நிறுவனங்களின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 59 நிறுவனங்களின் மாதிரிகள் 'தரமற்றது' என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில், மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் பட்டியல் சி.டி.எஸ்.சி.ஓ அமைப்பால் வெளியிடப்பட்டது. மருந்துகள் அனைத்தும் சோதனையிடப்பட்டு 'தரமற்றது', 'கலப்படம்' அல்லது 'போலியானவை' என்ற பிரிவின் கீழ் பிரிக்கப்பட இருந்தது.
பின், இந்த சோதனை அறிக்கைகளிலிருந்து, இருமல் மருந்து மாதிரிகள் எதுவும் போலியானவை என கண்டறியப்படவில்லை என தெரியவந்தது. இந்த மருந்துகள் அனைத்தும் அரசாங்க பரிசோதனை ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அறிக்கை வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்ட பிறகு உலகளவில் பல இறப்புகள் பதிவாகியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இறப்பு எண்ணிக்கைகளுக்கு பிறகு வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) இருமல் மருந்துகள் ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்க அனுமதியைப் பெறுவதை கட்டாயமாக்கியுள்ளது.
இதனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இருமல் மருந்துகளை DGFT அறிவுறுத்தலின் படி சி.டி.எஸ்.சி.ஓ சோதனை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: பாத வெடிப்பிற்கான காரணம் என்ன? வந்தால் என்ன செய்வது? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க!