இந்தக் கரோனா தொற்று சூழலில் பலருக்கும் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் உணவு. இது ஒவ்வொருக்கும் ஒவ்வொரு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம்மில் பலரும் வெளியே ஆர்டர் செய்து உணவு உண்பதை தவிர்த்து வீட்டில் சமைத்து உண்ண பழகிக்கொண்டோம். இதனால் நாம் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவை உண்டுவந்தோம். ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்துவந்த சிலரால் வீட்டு வேலையும் செய்துகொண்டு அலுவலக வேலை செய்ய முடியவில்லை. இதனால் அவர்களால் உண்ணும் முறையை சீர் செய்ய முடியாமல் போனது.
இதன் காரணமாக அவர்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டு உணவுப் பழக்கம் ஒழுங்கற்றதாக மாறிவிடும். உலகமே மாற்றத்தை சந்திக்கும்போது உணவுப் பழக்கமும் மாற்றத்தை சந்திக்குமல்லவா? இப்படி இருந்தவர்கள் தற்போது சாப்பிடுவதில் சில சிக்கல்களை சந்தித்துவருகின்றனர்.
இது குறித்து டாடா ஸ்கை பேமிலி ஹெல்த்தின் ஆரோக்கியம் குறித்த நிபுணர் வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கான உணவு உண்ணும் வழிகளை பட்டியலிடுகிறார்.
அட்டவணையின் முக்கியத்துவம்:
கடந்த ஓராண்டாக சமூகத்தில் பழக்கம் இல்லாமல் இருத்தல், வெளியே நேரத்தை செலவிடுவது, போக்குவரத்து போன்றவை இல்லாமல் இருந்தது உணவு உண்ணும் கோளாறுகளை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான வாழ்க்கை முறை இல்லாதது இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஒரு சூழலில் நாம் ஒரு அட்டவணையை உருவாக்கி, அதன்படி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து, குறிப்பிட்ட நேரத்தில் உறங்குவது அவசியம். இதுபோன்று செய்வதால் தொற்று காலத்தில் ஏற்படும் சலிப்பை போக்குகிறது. அட்டவணை என்ற ஒன்று இருந்தால், சரியான நேரத்துக்கு உணவு, உடற்பயிற்சி, தூக்கம் என அனைத்து விஷயங்களும் தானாகவே நடந்துவிடும்.
டெஸ்க்டாப் டையட்:
ஒரு நாளின் பெரும்பாலான பகுதி மேஜையிலும், நாற்காலியிலுமே கழிந்துவிடும் நிலையில், அவ்வப்போது சிற்றுண்டிகள் உண்ணுவது உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். ஆனால் இது உடலில் தேவையற்ற கொழுப்பை சேகரிக்க உதவுகிறது. இதனால் ஒருவர் குறைந்த கலோரியும், அதிக புரதம் இருக்கும் உணவை உண்ண வேண்டும் அல்லது குறைந்த கலோரியும் அதிக ஃபைபர் இருக்கும் சிற்றுண்டியை உண்ண வேண்டும். நீங்கள் உண்ணவேண்டிய உணவை முன்கூட்டியே திட்டமிட்டு ப்ரெஷ்ஷாக உண்ணுங்கள்.
மனதுடன் இணக்கமாக உண்ணுங்கள்:
மனதில் ஏற்படும் உள்ளுணர்வோடு உண்பதால், அவற்றை நம்பி உண்பதால் நீங்கள் வயிற்றின் பசியறிந்து உண்பீர்கள், மேலும் அவை உங்களுக்கு வயிறார உண்ணும் மனநிலையை ஏற்படுத்தும். மனதுடன் இணக்கமாக உண்பதால் நாம் தேர்வு செய்யும் உணவுகள், உண்ணும் உணவுகளில் மாறுதல்கள் ஏற்படும்.
மனதுக்கும் உடலுக்குமான ஒரு இணைப்பை உருவாக்கி உண்பதால் உணவுடனான நமது உறவு வலுக்கும். இதனை ஏற்படுத்த பல வாரங்களாக, மாதங்களாக நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
உள்ளுணர்வோடு ஒரு பயணத்தை தொடங்குங்கள்:
உங்கள் உடலை போதுமான சக்தியோடும், கார்போ ஹைட்ரேட்டுகளுடனும் வைத்திருங்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அதிகப்படியான பசி எடுத்தால், நாம் உணவு உண்பதற்காக வைத்திருந்த அத்துணை முறைகளும் தவிடுபொடியாகிவிடும்.
தவறான காரணங்களுக்காக உண்ணாதீர்கள்:
கோபம், வெறுப்பு, தனிமை போன்றவற்றை சமாளிக்க உணவை ஆயுதமாக எடுக்காதீர்கள். உங்கள் உணர்வுகளுடன் நீங்களே போராட கற்றுக்கொள்ளுங்கள்.
உணவுடன் ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்:
உங்கள் உணவு தேவை என்னவென அறிந்து அதற்கேற்றது போல உண்ணுங்கள்.
முழுமையாக இருக்கும்போது நிறுத்துங்கள்:
நீங்கள் முழுமையாக சாப்பிட்டுவிட்டீர்கள் என்று உங்களது உடல் உங்களுக்கு அறிவுறுத்தினால் அதற்கு மேல் உண்பதை நிறுத்திவிடுங்கள்.
அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டாம்:
நீங்கள் சோர்வாக இருக்கும் நேரத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். உங்கள் உடலின் தேவையை பொறுத்து உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்ணுங்கள்:
ஆரோக்கியமான உணவை உண்ணும்போது எப்படி உணர்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு அப்புறமும் நீண்ட ஆயுசு வேணுமா? - இனி இதைச் சாப்பிடுங்க!