லண்டன்: இளைஞர்கள், குழந்தைகள் இடையேயான பதிவான கரோனா அறிகுறிகள் காலப்போக்கில் மாறுதல் அடைந்துள்ளன. முன்பு பதிவான அறிகுறிகள் குறைந்துவிட்டன. புதிய அறிகுறிகள் பதிவாகிவருகின்றன என்று லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற வாழ்க்கை தரத்தின் ஆய்வுகள் மற்றும் நடத்தை ஆய்வுகளை போல் கரோனா அறிகுறி ஆய்வுகளும் மாறுதல்களையே சுட்டிக்காட்டுகின்றன.
இதுகுறித்து லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்னேஹல் பின்டோ பெரேரா கூறுகையில், "எங்கள் ஆராய்ச்சி கரோனா அறிகுறிகள் தொடர்பான ஆய்வுகளை ஒரு படி மேலே கொண்டுசென்றுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது தனிப்பட்ட கண்காணிப்புகள், ஆய்வுகள் மாறுதல் அடைவதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ஆய்வு 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 11 முதல் 17 வயதுடைய குழந்தைகளிடையே நடந்தப்பட்டது.
இவர்களது உடல்நிலை, 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் வரை என்று பிரிக்கப்பட்டன. இதில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டப் பின் ஏற்பட்ட மூச்சுத் திணறல், சோர்வு, மன அழுத்தம், இருமல், உள்ளிட்ட 21 வகையான அறிகுறிகளின் பட்டியலிடப்பட்டன. இந்த 21 அறிகுறிகளும் பொதுவாக அனைவருக்கும் பதிவாகின. இந்த அறிகுறிகளை அடுத்தாண்டு ஆய்வு செய்கையில் அவை மாறிவிட்டன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது தலைவலி, உடல் வலி, கண் எரிச்சல் உள்ளிட்ட புதிய அறிகுறிகள் தென்படுகின்றன. மூச்சுத் திணறல், இருமல் போன்ற அறிகுறிகள் குறைந்துவிட்டன என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூக்கம் உங்கள் கண்களை தழுவவில்லையா..? டைப் 2 நீரழிவு உங்களை தாக்கலாம்