ETV Bharat / sukhibhava

உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் இணைந்து நடத்திய ஆய்வின் இடைக்கால முடிவு வெளியீடு!

author img

By

Published : Oct 16, 2020, 10:41 PM IST

டெல்லி: உலக சுகாதார மையம், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை இணைந்து நடத்திய இடைக்கால சோதனை முடிவுகளை பேராசிரியர் பல்ராம் பார்கவா வெளியிட்டுள்ளார்.

interim-results-from-solidarity-trial-led-by-icmr-and-who-answers-critical-questions-about-covid-19-therapeutics

இந்த சோதனையில் ரெம்டெசிவிர், இண்டெர்ஃபெரான் பீட்டா1, லோபினேவிர், ஹைட்ராக்சிகுளோகுயின் ஆகிய நான்கு பயன்பாட்டு மருந்துகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்த இடைக்கால முடிவுகள் மூலம் இதில் உள்ள எந்தவொரு மருந்தும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த பரிசோதனையில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். தொற்றுநோய்களின் போது கூட, சிகிச்சைகள் தொடர்பான முக்கியமான பொது சுகாதார கேள்விகளுக்கு நம்பகத்தன்மையுடன் பதிலளிக்க, தேசிய சோதனைகள் சாத்தியம் என்று ஐ.சி.எம்.ஆர் காட்டியுள்ளது.

இது நிச்சயம் ஒற்றுமையாக செயல்படுத்தப்பட்ட ஒரு பரிசோதனை. இந்த சோதனையில் 2020 அக்டோபர் 15ஆம் தேதி நிலவரப்படி, 937 பங்கேற்பாளர்களுடன் 26 தீவிரமாக சீரற்ற தளங்களை உள்ளடக்கியது. இந்த மிகமுக்கிய கண்டுபிடிப்புகளுக்கு பங்களித்த சோதனை பங்கேற்பாளர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த சோதனை முடிவுகளை வெளியிடுவதற்கான மதிப்பாய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த இடைக்கால முடிவினால் இண்டெர்ஃபெரான் பீட்டா1 பரிசோதனைகள் முடிவடையாமல் நிறுத்தப்பட்டுள்ளது. ஆராய்ச்சியின் துல்லியத்தை அதிகரிப்பதற்காக, ரெம்டெசிவிரின் சீரற்றமயமாக்கலைத் தொடர சோதனைக்கு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், மிகவும் பயனுள்ள சிகிச்சைக்கான தேடலைத் தொடர வேண்டியிருக்கும். இம்யூனோமோடூலேட்டர்கள் மற்றும் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் போன்ற புதியவை விரைவில் இந்த சோதனை தளத்தில் உலகளவில் சோதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனைவியின் தலையை வெட்டி காதலன் வீட்டில் வீசிய கணவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.