ETV Bharat / sukhibhava

Blood Detoxification Yoga in Tamil: இரத்தத்தைச் சுத்திகரிக்கும் யோகா.? தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.!

ஒரு மனிதனின் முழு ஆரோக்கியம் என்பது அவரின் இரத்த அணுக்களின் நிலைப்பாட்டை பொறுத்தே உள்ளது. இரத்தத்தில் அதிகப்படியான நச்சுத்தன்மை இருக்கும்போது உங்கள் ஆரோக்கியம் கேள்விக் குறியாகும். இதற்கு யோகா மூலம் எப்படித் தீர்வு காண்பது எனப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 5:51 PM IST

Updated : Oct 5, 2023, 8:03 PM IST

சென்னை: இரத்த நச்சு நீக்கம் என்பது உங்கள் இரத்த அணுக்களில் இருந்து தீங்கு விளைவிக்கும் கூறுகளை அகற்றும் செயலாகும். சுற்றுச் சூழல் மாசுபாடு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது உடலில் உள்ள இரத்தத்தில் நச்சுத் தன்மை சேர்கிறது. இரத்தம் பொதுவாகவே நச்சுத் தன்மையை அகற்றும் திறன் கொண்டதுதான் ஆனால், அதிகப்படியான நச்சுத் தன்மை இரத்தத்தில் சேரும்போது அதை நம் தனித்துவமான நடவடிக்கை மூலம் அகற்ற வேண்டும். இரத்தம் நச்சுத் தன்மை அடையும்போது உடல் சோர்வு, தூக்கமின்மை, பசியின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொள்வோம். இந்நிலையில் இரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க உதவும் சில யோகாசனம் குறித்துப் பார்க்கலாம்.

கால்களை விரித்து முன்னோக்கி வளைதல்
கால்களை விரித்து முன்னோக்கி வளைதல்

(Wide-Legged Forward Bend) கால்களை விரித்து முன்னோக்கி வளைதல்; இந்த யோகா உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதுடன் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. உங்களின் இரு கால்களையும் விரித்து தலையைப் பூமியை நோக்கி முன்பக்கமாக கீழே சாய்த்து மூச்சை உள் இழுத்து வெளிவிடும்போது வயிற்றில் ஒரு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் குடல் இயக்கத்தை மேம்படுத்தி நச்சுக்களை அகற்ற உதவுகிறது.

முக்கோண வடிவில் உடலை வளைத்தல்
முக்கோண வடிவில் உடலை வளைத்தல்

(Revolved Triangle Pose) முக்கோண வடிவில் உடலை வளைத்தல்; கால்களை விரித்து ஒரு பக்கமாகச் சரிந்து ஒரு கையால் அதன் மறுபக்கம் இருக்கும் காலை குனிந்து தொட்டுக்கொண்டு அடுத்த கையை மேலே நோக்கி நீட்டும் வகையிலான யோகா. பார்ப்பதற்கு உடலைச் சுழற்றியவாறு முக்கோண வடிவில் இருக்கும் இந்த யோகாவைச் செய்வதன் மூலம் உடல் சோம்பல் சரியாகி சுறுசுறுப்பு பெறுவதுடன் உடல் வலியும் நீங்கும். தசைகளை முறுக்கி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், கால்களுக்கு இடையில் 3 முதல் 5 அடி இடைவெளியை உருவாக்கி, உங்கள் வலது காலை முன்னோக்கி வைக்கவும், இடதுபுறம் காலை பின்னால் வைக்கவும்.

தொடர்ந்து உங்கள் உடற்பகுதியை முன்னோக்கி வளைக்கவும். பின்னர், உங்கள் வலது கையை, உங்கள் முதுகில் கொண்டு வாருங்கள். இடது கையை வலது காலை நோக்கி நகர்த்துங்கள். தொடர்ந்து வலது கையை மேலே தூக்க வேண்டும். இப்போது, மூச்சை வெளியேற்றத் தொடங்கி, வலது உள்ளங்கையால் பூமியைத் தொட வேண்டும். நிலையை மாற்றுவதற்கு முன்பு சுமார் 60 வினாடிகள் இந்த நிலையிலேயே இருங்கள். இது உடல் முழுவதும் ஊட்டச்சத்துக்களைச் சிறந்த முறையில் கொண்டு செல்ல உதவுகிறது. இந்த யோகா உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைக்க உதவுகிறது.

கால்களை விரித்து முதுகை வளைத்து தலையைக் கீழ் நோக்கி வைக்கும் யோகா

(Downward Facing Dog) கால்களை விரித்து முதுகை வளைத்து தலையைக் கீழ் நோக்கி வைக்கும் யோகா; இந்த யோகா செய்யும்போது உங்கள் உடலில் உள்ள வெப்பம் வெளியேற்றப்பட்டு, நச்சுத்தன்மையும் இரத்தத்தில் இருந்து அகற்றப்படும். இந்த யோகாவை மேற்கொள்ளும்போது, உங்கள் மொத்த எடையையும் உங்கள் முழங்கால் மற்றும் கைகள் தாங்கிப் பிடிக்கிறது. தொடர்ந்து, உங்கள் மணிக்கட்டுகளை உங்கள் தோள்பட்டை பகுதியின் கீழும் முழங்கால்களை இடுப்பு பகுதியின் கீழும் வைத்து மூச்சை உள்ளே இழுங்கள். உங்கள் உடலின் பின் பகுதியைத் தளர்வாக வைத்துக்கொண்டு மூச்சை வெளியேற்றுங்கள். அதே நேரம், உங்கள் முதுகெலும்பு மற்றும் முழங்கால்களையும் மேல் நோக்கி நகர்த்த வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த யோகாவை மேற்கொள்ளும்போது உங்கள் உடல் முக்கோண வடிவில் இருக்க வேண்டும்.

மரிச்சியாசனா அல்லது முனிவர் முறுக்கு யோகா

(Marichyasana or Sage Twist Pose) மரிச்சியாசனா அல்லது முனிவர் முறுக்கு யோகா; இந்த யோகா உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் நச்சுகளை நீக்க உதவுகிறது. இந்த யோகாவை மேற்கொள்வது எப்படி என்றால், முதலில், யோகா பாயில் உங்கள் கால்களை நேராக வைத்துக்கொண்டு உட்கார வேண்டும். பிறகு, உங்கள் இடது பாதத்தை மார்புப் பகுதியை நோக்கி வளைத்து, உங்கள் உடற்பகுதியை இடது முழங்காலை நோக்கிச் சுழற்ற வேண்டும். அதனைத் தொடர்ந்து, உங்கள் வலது கையை இடது முழங்காலில் சுற்றிக் கொள்ள வேண்டும். பிறகு சிறிது நேரம் சுவாசத்தை இழுத்து விடுங்கள். அதனைத் தொடர்ந்து வலது பாதத்தை அதேபோல் மேற்கொள்ளத் தொடங்குங்கள். இந்த யோகா செரிமான சுரப்பிகள் சுரப்பதைத் தூண்டுகிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. உடல் முழுவதும் இரத்தம் சீராகச் சென்றடைய உதவுகிறது.

என்னதான் நீங்கள் மருந்துகளை எடுத்துக்கொண்டாலும், ,யோகா உங்களுக்குச் சிறந்த பலன் தரும் என்பதை முழுமையாக நம்புங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.

இதையும் படிங்க: லேடீஸ் ஹேண்ட் பேக் சீக்ரெட்.. உள்ள என்னென்ன இருக்கனும் தெரியுமா.?

Last Updated : Oct 5, 2023, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.