ETV Bharat / sukhibhava

அஸ்வினி பூச்சி தொல்லையா?.. அப்போ கண்டிப்பா இத பண்ணுங்க! இரண்டே நாள்ல சரி ஆகிடும்! - Etvbharat tamil

How to control aphids pests in tamil: வீடுகளில் தோட்டம் வைத்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக அஸ்வினி பூச்சி தொல்லை இருக்கும். இந்த அஸ்வினி பூச்சிகளின் தொல்லைக்கு, வீட்டிலேயே பூச்சி கொல்லி மருந்துகளை தயார் செய்யலாம். எப்படினு பார்க்கலாமா.

அஸ்வினி பூச்சிகள்
அஸ்வினி பூச்சிகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 9:25 AM IST

சென்னை: மனிதர்களின் வளர்ச்சிக்கும், வாழ்விற்கும் உணவு என்பது முக்கியமான ஒன்று. நலமாக வாழ காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவர். அவ்வாறு நாம் உண்ணும் பழங்களும், காய்கறிகளும் இயற்கையாக விளைந்தவையா? இந்த காய்கறிகளை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்குமா? அல்லது நோய் கிடைக்குமா? என்ற குழப்பத்தில் ஆர்கானிக் பழங்களையும், காய்கறிகளையும் தேடி தேடி வாங்குவர்.

அஸ்வினி பூச்சி தொல்லை: நாளடைவில் வீட்டிலேயே தோட்டம் அமைத்து, வீட்டிலேயே ஃப்ரெஷ்ஷான காய்கறிகளை பறித்து சமைத்து உண்ணலாம் என்று முடிவெடுப்பர். மாடித்தோட்டமும் வைப்பர். நர்சரியிலிருந்து வாங்கி வரும் போது நன்றாக இருக்கும் செடிகள் வீட்டில் வைத்த சில நாட்களிலேயே வளர்ச்சி குன்றி விடும். எதனாலனு போய் பார்த்தா... பூச்சி. செடிகளில் அஸ்வினி பூச்சிகளின் ஆதிக்கம் நிறைந்திருக்கும்.

பூச்சிகளை ஒழிக்க டிப்ஸ்: ஆசை ஆசையாய் வாங்கி வந்த செடியை இழக்க மனமில்லாமல், சிலர் பூச்சி மருந்தை தெளிப்பர். பூச்சி மருந்து கலந்த காய்கறிகளையா நாம் விரும்பினோம். இன்னும் சிலர் மனம் வெறுத்து அதை அப்படியே விட்டு விடுவர். இனி அந்த கவலை வேண்டாம். அஸ்வினி பூச்சிகளிலிருந்து செடிகளை பாதுகாக்க அருமையான ஐடியா இருக்கு. நம்ம வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே, இயற்கையான முறையில் பூச்சி மருந்தை தயாரிக்கலாம். இந்த டிப்ஸ் மாடித்தோட்டம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமில்ல, வீட்டில் சின்னதா பூ செடி, காய்கறி வைத்துள்ளவர்களுக்கும் தான்.

வேப்ப எண்ணெய் போதும்: ஒரு லிட்டர் தண்ணீரில், 10 மில்லி லிட்டர் வேப்ப எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். எண்ணெய் தண்ணீரில் சரியாக கலக்காது. அதனால் இதனுடன் சிறிது சோப் ஆயில் கலந்து, நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் மேலும் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி, நன்றாக குலுக்கி, தெளிப்பான் (Spray Bottle) போன்ற பாட்டிலில் ஊற்றி கொள்ளலாம். இதன் பின் எந்தெந்த செடிகளில் அஸ்வினி பூச்சிகளின் தாக்கம் இருக்கிறதோ அந்தந்த செடிகளில் தெளித்துவிட்டால் போதும். இரண்டே நாட்களில் அஸ்வினி பூச்சிகளில் தொல்லை நீங்கி, செடிகள் ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.

பெருங்காயம் போதும்: நம் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கட்டி பெருங்காயத்தை வைத்தும், அஸ்வினி பூச்சிகளை விரட்டலாம். கட்டி பெருங்காயத்தை பொடி செய்து கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில், ஒரு ஸ்பூன் கட்டி பெருங்காய பொடியை சேர்த்து கலக்க வேண்டும். பெருங்காயம் நன்கு கரைந்தப் பின் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அஸ்வினி பூச்சி இருக்கும் செடிகளில் தெளித்தால் போதும் கண்டிப்பாக அஸ்வினி பூச்சியின் தொல்லை இருக்காது.

இதையும் படிங்க: How To Reduce Waist Size in Tamil: தொப்பையைக் குறைக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்கள்..கண்டிப்பா நல்ல ரிசல்ட் கிடைக்கும்.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.