டெல்லி: வயதானவர்கள் டிஜிட்டல் புதிர் விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடும்போது அவர்களின் நினைவாற்றல் இருபது வயதுடையவர்களுக்கு இணையாக மாற்றம் பெறும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
கண்ணாடியை எங்கையோ வச்சேன் மறந்துட்டேன்.. அந்த ஃபோன் எங்க வச்சேன்னு தெரியல.. இப்பெல்லாம் ஒரே மறதியா இருக்கு என்ற பேச்சுக்களை வீட்டில் உள்ள முதியவர்கள் மத்தியில் கேட்டிருப்போம். வயதாகும்போது பொதுவாக மறதி ஏற்படுவது வழக்கம்தான். வயதாக வயதாக அவர்களின் மூளையில் அவர்களின் நினைவாற்றல் குறைகிறது இதனால் மறதி இயல்பாக ஏற்படுகிறது.
அது மட்டும் இன்றி வயதானவர்களுக்கு வரும் ரத்த அழுத்த நோயின் காரணமாகவும் மறதி நோய் ஏற்படலாம். இந்த மறதியை கட்டுப்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கச் செய்ய முதியவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் ஆய்வாளர்கள் கூறும் இந்த புதிய டெக்னிக்கை முயற்சித்துப் பாருங்கள். வெறும் வார்தைகளால் மட்டும் இல்லாமல் ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதன் தரவுகளை பகிர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: World Pre Diabetes Day: உலக நீரிழிவு நோய் முந்தைய நிலை தினம்: அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
கனடாவின் யோர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் Heliyon இதழில் வெளியாகியுள்ளது. அதில் டிஜிட்டல் கேம் விளையாடும் இளையவர்கள் மற்றும் முதியவர்களை உள்ளடக்கி ஆய்வு மேற்கொண்டதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள் டிஜிட்டல் புதிர் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் அவர்களின் கவனச்சிதறல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கிறது என கூறப்பட்டுள்ளது. அதேபோல, ஃப்ரி ஃபைர், ரம்மி உள்ளிட்ட பல ஸ்ரேட்டஜி (strategy games) டிஜிட்டல் விளையாட்டுக்களை விளையாடும் முதியவர்கள் மத்தியில் அந்த நினைவாற்றல் பொதுவாகக் காணப்படவில்லை எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக மனிதர்கள் மத்தியில் 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் வேலை செய்வதற்கான நினைவாற்றல் அதிகரித்து அதனை தொடர்ந்து வயதாக, வயதாக நினைவாற்றல் படிப்படியாக குறையும். இந்த நினைவாற்றலை புதுப்பித்துக்கொள்ள வயதாகும்போது முதியவர்கள் ஆன்லைன் புதிர் விளையாட்டுகளை விளையாடலாம் எனவும் அது நூறு சதவீதம் பலனை தரும் எனவும் கூறியுள்ளனர்.
பெரியவர்கள் மற்றும் இளையோர் உள்ளடக்கிய ஒரு குழுவினரிடம் டிஜிட்டல் புதிர் விளையாட்டுகளை விளையாட சொல்லி இடை இடையே கவனச்சிதறலை ஏற்படுத்தியுள்ளனர். அந்த நேரத்தில் சிறியவர்கள் விட பெரியவர்களிடம் நினைவாற்றல் அதிகமாக காணப்பட்டுள்ளது. ஆனால் இது புதிர் விளையாட்டுகளை விளையாடும்போது மட்டும்தான் நடக்கிறது எனவும் ஆய்வாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கண்களில் வறட்சியா? இதுதான் காரணம்!.. மருத்துவரின் அறிவுரையை கேளுங்கள்..