ETV Bharat / sukhibhava

Drinking and lower muscle mass: அதீத குடிப்பழக்கத்தின் விபரீத விளைவு!- எச்சரிக்கும் மருத்துவர்கள்

அதீத குடிப்பழக்கம் உடல் தசை இழப்பை ஏற்படுத்தும் என இங்கிலாந்து பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 17, 2023, 7:01 PM IST

Updated : Jun 29, 2023, 7:47 PM IST

அதீத குடிப்பழக்கத்தின் விபரீத விளைவு!- எச்சரிக்கும் மருத்துவர்கள்

ஐரோப்பா: குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதால் கல்லீரல் செயலிழப்பு, புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என கேட்டிருப்போம். ஆனால், அதையும் தாண்டி 'தசை இழப்பு' என்ற ஆபத்து இருப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். அதீத குடிப்பழக்கம் உள்ளவர், அளவாக குடிப்பவர், குடிப்பழக்கமே இல்லாதவர் என ஆண்கள் மற்றும் பெண்களை வகைப்படுத்தி இங்கிலாந்தில் உள்ள University of East Anglia ஆய்வு நடத்தியது.

இங்கிலாந்து நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதில், அதீத குடிப்பழக்கத்தின் விளைவு கல்லீரல் இழைநார் வளர்ச்சி, புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள்தான் மட்டும்தான் என நினைத்ததற்கு நேர்மாறாக வேறு பல உடல்நலக் கோளாறுகளை வரவழைக்கும் என்ற அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது.

ஐரோப்பாவில் உள்ள சுமார் அரை மில்லியன் மக்களை ஒன்றிணைத்து அவர்களின் வாழ்கை முறை, சுகாதாரம் உள்ளிட்டக்கிய பல காரணிகளை முன்நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 37 வயது முதல் 73 வயதிற்கு உட்பட்ட 2 லட்சம் மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாள் ஒன்றுக்கு புரதசத்து நிறைந்த உணவை எவ்வளவு எடுத்துக்கொண்டார்கள், புகைபிடித்தார்களா உள்ளிட்ட பலவற்றை கூர்ந்து கவனித்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தினோம்.

மேலும், ஆண்கள் பெண்கள் என இருப்பாலருக்கும் இடையே இந்த ஆய்வு தனித்தனியாக நடத்தப்பட்டது. காரணம் பாலினம் மாறுபடும்போது ஆய்வின் முடிவுகளிலும் மாறுபடு ஏற்படலாம். எனவே இரு பாலருக்கும் தனித்தனியாக ஆய்வு நடத்த தேவையான அனைத்து தரவுகளையும் UK Biobank மூலம் பெறப்பட்டது.

இந்த ஆய்வை மேற்கொள்ள ஆரோக்கியமான உடல் தசை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை தேர்வு செய்து, ஆண் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு யூனிட் ஓயின் மற்றும் பெண் ஒருவருக்கு 2 யூனிட் ஒயின் என குடிக்க கொடுத்து நாள் ஒன்றுக்கு 20 யூனிட் ஒயின் குடிப்பவரோடு ஒப்பிட்டோம். (20 யூனிட் ஓயின் என்பது, 2 பாட்டில் ஒயின் மற்றும் 10 பாட்டில் பீருக்கு சமம்) அப்போது 20 யூனிட் ஒயின் குடித்த நபர் மற்ற நபர்களை விட 4 முதல் 5 சதவீதம் குறைவான தசையை கொண்டிருந்தார். இது இளம் பருவத்தில் இருப்பவர்கள் முதல் முதியோர்களுக்கு இடையே மாறுபடலாம் எனவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

தசை இழப்பு மற்றும் ஆரோக்கியம்: குடிப்பழக்கம் நேரடியாக தசை இழப்பை ஏற்படுத்துமா என கேட்டால் அது கிடையாது. ஏனென்றால் இந்த ஆய்வில் மது அருந்தும் அளவு மற்றும் காலம் இரண்டையும் சமமாக ஒப்பீடு செய்து பார்த்தோம். அதன் அடிப்படையில் அந்த மனிதனின் உடலில் உள்ள தசைகள் உடனே மெலிந்துவிடுவது இல்லை எனவும் படிப்படியாக தசை இழப்பு ஏற்படும் என்றுமே ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது. மேலும் இந்த ஆய்வு 37 வயது முதல் 73 வயதிற்கு உட்பட்ட மக்களிடம் மட்டுமே நடத்தப்பட்டுள்ள நிலையில் 75 வயதிற்கு மேற்பட்ட மக்களிடம் ஆய்வு முடிவுகளில் மாற்றங்கள் இருக்கலாம்.

காரணம் ஒருவர் வயது முதிர்வு ஏற்படும்போது சாதாரணமாகவே தசை இழப்பு ஏற்படும் அதனுடன் அதிக மது அருந்தும் பழக்கமும் இருந்தால் அது வேறுமாதிரியான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். 30 வயதை கடந்து மனிதர்கள் பயணிக்க தொடங்கும்போதே உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத்தொடங்குகின்றன ஆனால் இதனை நாம் உடனடியாக உணர்வதில்லை. காலப்போக்கில் அதிக மது அருந்தும் நபருக்கு சர்கோபீனியா எனப்படும் பக்க விளைவு உடலில் ஏற்படலாம்.

அதனை தொடர்ந்து, ஏற்படும் தசை இழப்பு, குறைவான எலும்பு அடர்த்தி, எலும்பு முறிவுகள், பலவீனம், நீரிழிவு நோய் மற்றும் இளம் வயதிலேயே உயிரிழப்பு போன்ற பல பிரச்னைகளுக்கு வழிவகை செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதீத மது அருந்தும் நபர் உணவு உட்கொள்வதை குறைத்துக்கொள்ளாமல், உடற்பயிற்சி மற்றும் போதுமான புரதம் கொண்ட உணவை உட்கொள்வதன் மூலம் இந்த தசை இழப்பை தடுக்க முடியும்.

மேலும், 50 மற்றும் 60 வயதிற்குட்பட்டவராக இருந்தால், அதிகப்படியான மது அருந்துவதைத் தவிர்ப்பது வயதாகும் காலத்தில் தசை இழப்பை தவிர்க்க உதவும் என ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. உடல் ஆரோக்கியம், மற்றும் எதிர்காலத்தை பற்றிய அக்கறை உள்ளவர்கள் அதீத மது அருந்துவதை தவிர்த்து விட்டு தசை இழப்பு பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றே ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இதையும் படிங்க: Canada bus crash: கனடாவில் பேருந்து - கனரக லாரி மோதல்.. 15 பேர் உயிரிழப்பு

Last Updated : Jun 29, 2023, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.