ETV Bharat / sukhibhava

இயர்ஃபோன் அதிகம் பயன்படுத்தும் நபரா நீங்கள்? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க! - காது கேளாத கோளாறை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்

தொற்று காலத்தில் உடலை பராமரிப்பதைபோல நமது உடலின் முக்கிய பாகமான காதுகளையும் பராமரிக்க வேண்டும். குறிப்பாக அதிக அளவில் ஹெட்ஃபோன், இயர்ஃபோன் பயன்படுத்தும் நபராக நீங்கள் இருந்தால் நிச்சயம் இந்தக் கட்டுரை உங்களுக்கு பலனளிக்கும்.

habits to avoid hearing damage due to earphones

author img

By

Published : Aug 23, 2020, 12:30 AM IST

உலகெங்கிலும் கரோனா ஊரடங்கு காரணமாக இணையதள உபயோகம் அதிகரித்துவிட்டது. கரோனாவை தவிர்த்து பிற நோய்களும் தோன்றியுள்ளன. குறிப்பாக ஹெட்ஃபோன்கள், இயர்ஃபோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் காது கேளாமை போன்ற பிரச்னைகள் அதிகரித்துள்ளன. உலக அளவில் காது கேளாத பிரச்னை உடையவர்களின் எண்ணிக்கை 5.3 விழுக்காடாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுவாக சத்தத்தின் அளவு டெசிபல் என்ற அளவுகோலை வைத்து கணக்கிடப்படுகிறது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை 85 டெசிபலுக்கு மேல் உள்ள சத்தத்தை அதிக நேரம் கேட்டால் காதுகளில் கோளாறு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக ஹெட்ஃபோன்கள், இயர்ஃபோன்களை அதிகமாக பயன்படுத்துவது இந்த கோளாறு ஏற்படுத்துவதை துரிதப்படுத்துகிறது.

சிலருக்கு தவிர்க்க முடியாத காரணங்களால் ஹெட்ஃபோன்கள், இயர்ஃபோன்களின் தேவை உள்ளது. இதன்மூலம் ஏற்படும் பாதிப்பை சில வழிமுறைகளை கடைபிடித்து தவிர்க்கலாம்.

  • செல்போன்களிலோ அல்லது மற்ற சாதனங்களிலோ அதிக சத்தம் கேட்பதை தவிர்த்துவிடுங்கள். தேவை இருப்பின் அதிக நேரம் கேட்பதையாவது நிறுத்திவிட்டு காதுகளுக்கு ஓய்வு கொடுங்கள்.
  • உறங்கும்போது பாட்டு கேட்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இது நிச்சயம் தவிர்த்துவிட வேண்டிய ஒன்று. இது உடலுக்கும் ஆபத்து கூட. உறக்கம் இல்லாத நேரத்தில் படுத்திருக்கும்போது கேட்கலாம். கண்கள் சொக்கினால் பாடலை நிறுத்திவிட்டு கனவுலகத்திற்கு வணக்கம் சொல்லுங்கள்.
    habits to avoid hearing damage due to earphones
    தூக்கத்தில் இயர்ஃபோன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்
  • இயர்ஃபோன் பட்ஸை தேர்ந்தெடுங்கள். மென்மையான இயர்ஃபோன்கள் காதுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. சில நேரம் காதுகளுக்கு ஒத்துப்போகாத இயர்ஃபோன்களை பயன்படுத்துவதால் காதுகளில் கீறல்கள், வெட்டுகள் விழும் வாய்ப்பு அதிகரிக்கும்.
  • சிலர் இயர்ஃபோன்களை என்று வாங்கினார்களோ அன்றிலிருந்து ஒருமுறை கூட அவற்றை சுத்தம் செய்திருக்கமாட்டார்கள். சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்காது. நீங்கள் அப்படி ஒருவராக இருந்தால் உடனடியாக உங்கள் இயர்ஃபோன்களை சுத்தம் செய்துவிடுங்கள். ஏனென்றால் அதிகளவிலான தொற்று கிருமிகள் நமது இயர்ஃபோன்களில் ஒட்டிக்கொண்டிருக்கும். அவற்றை சுத்தம் செய்யாவிட்டால் அது தொற்று ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை ஈர்த்துவிடும்.
  • இயல்பாகவே காதுகளை சுத்தம் செய்யும் தன்மை காதுகுழாய்க்கு உண்டு. அதிகமாக இயர்ஃபோனை பயன்படுத்தினால் அது காதுகுழாயை அடைத்து பல பிரச்னைகளை ஏற்படுத்தும். அதை தவிர்க்க இயர்ஃபோனை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை உங்கள் யூசர் மேனுவலில் இருக்கும் வழிமுறைகளை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
  • அதிகமாக இசை ஒலிக்கும் பார்ட்டிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு சென்றால் அவ்வப்போது இடைவெளிவிட்டு காதுகளுக்கு ஓய்வு கொடுங்கள்.

இதையும் படிங்க...தூக்கமின்மைக்கு ஆயுர்வேதத்தில் என்னதான் தீர்வு இருக்கு?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.