இரட்டை கன்ன அமைப்பிலிருந்து விடுபட மக்கள் மிகவும் கடினமாக உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதில் மிகுந்த கவனம் செலுத்துவது பெண்கள் தான். சிலர் இதற்காக அறுவை சிகிச்சையும் செய்து கொள்கிறார்கள். ஆனால், வீட்டில் இருந்தபடியே கூர்மையான தாடைகளை பெற சில எளிய பயிற்சிகள் உள்ளன. அவை குறித்து கீழ்வருமாறு காணலாம்.
சூவிங் கம்
இரட்டை கன்னத்தை அகற்ற இது மலிவான மற்றும் எளிதான வழியாகும். சூவிங் கம்மை மெல்லும் போது நம் முகம் மற்றும் கன்னத்தின் கிட்டத்தட்ட அனைத்து தசைகளும் தொடர்ந்து வேலை செய்கின்றன. இதன் காரணமாக, கூடுதல் கொழுப்பு குறைவது மட்டுமல்லாமல் தாடை தசைகளும் வலுவடையும்.
கழுத்துப் பயிற்சி
உங்கள் முதுகை நேராக வைக்கவும். இப்போது உங்கள் கழுத்தை பின்புறத்திலிருந்து அரை வட்டமாகச் சுழற்றி, உங்கள் வலது தோள்பட்டையால் உங்கள் கன்னத்தைத் தொடவும். இந்த நிலையில் 3-6 விநாடிகள் இருக்கவும், பின்னர் உங்கள் இடது தோள்பட்டைக்கு அரை வட்டமாக இருபுறமும் 10-15 நிமிடங்கள் செய்யவும்.
நாக்கு பயிற்சி
உங்கள் தலையை நேராக வைத்து உங்கள் நாக்கை கொண்டு மூக்கை தொட முயற்சிக்கவும். இந்த நிலையில் 10 விநாடிகள் இருங்கள் மற்றும் உங்கள் நாக்கை மீண்டும் சாதாரண நிலைக்குக் கொண்டு வாருங்கள். இதை தினமும் 6-10 முறை, 10 வினாடிகள் இடைவெளியில் செய்யவும்.
கன்னத்தை தொடும் பயிற்சி
இது மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள பயிற்சியாகும். இங்கே நீங்கள் உங்கள் இரு உள்ளங்கைகளிலும் உங்கள் கன்னத்தில் வைத்து, இரு கைகளின் விரல்களையும் தாடையின் இருபுறமும் வைக்க வேண்டும். உங்கள் தாடை மற்றும் உள்ளங்கைகளுக்கு அழுத்தம்கொடுத்து, முடிந்தவரை அதே நிலையில் உங்கள் வாயைத் திறக்க முயற்சிக்கவும்.
மீன் வாய் வடிவ பயிற்சி
மீன்களின் வாய் போன்று கன்னத்தை வைத்து செய்யும் பயிற்சி நல்ல பலனைத் தரும். இங்கே, நீங்கள் உங்கள் கன்னங்களை உள்நோக்கி உறிஞ்சி 30 விநாடிகள் வரை அதே நிலையில் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு 4-5 முறை செய்யலாம்.
ஃபேஸ் லிஃப்ட் பயிற்சி
இந்த பயிற்சியில், உங்கள் வாயை முடிந்தவரை அகலமாக திறந்து மூக்கை ஊதுங்கள். சுமார் 10 விநாடிகள் இந்த நிலையில் இருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புங்கள். இதை ஒரு நாளைக்கு 4-5 முறை மீண்டும் செய்யலாம்.
முழு முக உடற்பயிற்சி
முகத்தின் கிட்டத்தட்ட அனைத்து தசைகளும் இதில் ஈடுபடுவதால், இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த பயிற்சிக்காக, முடிந்தவரை உங்கள் கண்களைத் திறந்து உங்கள் புருவங்களை உயர்த்தவும். இதனுடன், உங்கள் பற்கள் அனைத்தும் தெரியும் வகையில், முடிந்தவரை அகலமாக புன்னகைக்கவும். இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு 10-20 முறை செய்யவும்.
'ஓ' மற்றும் 'இ' எழுத்துக்களைச் சொல்லுங்கள்
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஓ மற்றும் இ என்ற எழுத்தை முடிந்தவரை வாயை நன்றாக திறந்தபடி சொல்லவேண்டும்.
இதையும் படிங்க: எலும்பு மெலிதல் நோய்: ஏன், எதனால், என்ன செய்யலாம்?