வாஷிங்டன்: பள்ளிக் கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கிட்டப்பார்வை குறைபாடு வருவதற்கான ஐந்து வெவ்வேறு மரபணு காரணங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெரிமி குக்கென்ஹேம் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
கிட்டப்பார்வை குறைபாடு என்பது பல்வேறு கண்சார்ந்த குறைபாடுகளில் ஒன்றாகும். முதியவர்களுக்கு வரும் பார்வை குறைபாடிற்கு இதுவே காரணம். பொதுவாக மக்களிடையே இந்தக் கிட்டப்பார்வை குறைபாடு மரபணு காரணங்களினாலோ, வெளியில் செலவிடப்படும் நேரங்கள் குறைவதாலும், அதிக நேரம் படிப்பதாலும் கூட இந்தக் குறைபாடு ஏற்படலாம். மரபணு ரீதியான காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும், வாழ்க்கை முறையும் ஓர் முக்கிய காரணமாகத் திகழ்கிறது.
இதுகுறித்து ஆய்வாளர்கள், ஐரோப்பிய வம்சாவளியைச் சார்ந்த ஏறத்தாழ 3,40,000 நபர்களை சோதனை செய்தனர். இதில் அவர்கள் செய்த விரிவான ஆய்வில், மக்களிடையே கிட்டப்பார்வை குறைபாடை உண்டாக்கும் மரபணு மாற்றங்களைக் கண்டறிய முயன்றனர். இதில் பள்ளிகளில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு இந்தக் குறைபாடு வர வாய்ப்புள்ளது எனத் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து ஆய்வாளர் குக்கென்ஹேம் கூறுகையில், ''சரிசெய்யவே முடியாத பார்வை குறைபாடுகளுக்கு இந்தக் கிட்டப்பார்வை குறைபாடே காரணம். நம் ஆய்வில் கிட்டப்பார்வை குறைபாடிற்கும் அதிக நேரம் கற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பு கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் அதிக ஆண்டு கல்வியில் செலவிட்ட ஐந்து மரபணுக்களில் பார்வை குறைபாடு வளர்ச்சி பெறுவது தெரியவந்துள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: வாஸ்குலர் இன்சுலின் எதிர்ப்பு - ஆண்கள் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது?