ETV Bharat / sukhibhava

மழைக் காலத்தில் இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாதீங்க.. மருத்துவர்கள் கூறும் அட்வைஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 1:21 PM IST

Foods to Avoid During Monsoon in Tamil: மழைக் காலத்தில் என்னென்ன உணவுகளை சாப்பிடக் கூடாது என்றும், அவற்றை சாப்பிடக் கூடாததற்கான காரணங்களையும் பார்க்கலாம்.

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சென்னை: கோடையின் காட்டத்தால் மழைக் காலத்தை ரசிக்கவே செய்கின்றோம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் உணவு. கோடைக் காலத்தில் நமக்கு பிடித்த எண்ணெயில் பொறித்த உணவுகள், உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் இறைச்சி, நட்ஸ் போன்றவற்றை சாப்பிட முடியாமல் தவித்து, எப்போது மழைக்காலம் வரும் என்று ஏங்குவோம்.

மழைக்காலம் வந்தவுடன் எண்ணெயில் பொறித்த க்ரிஸ்பியான பக்கோடா, பஜ்ஜி, சிப்ஸ், வடை, சமோசா, சிக்கன், மசாலா பூரி, பானி பூரி, காளான் மசாலா, பேல் பூரி, நண்டு, துரித உணவுகளான மேகி நூடுல்ஸ், ப்ரைடு ரைஸ், ப்ரைடு நூடுல்ஸ், பர்கர், மோமோஸ் (Momos) போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவோம். மழைக்காலத்தில் இப்படி நமக்கு விருப்பமான உணவுகளை சாப்பிடும் போதும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நினைப்போம்.

ஆனால் மழைக் காலத்தில் தான் அதிக கவனத்துடன் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் கோடைக்காலத்தை விட மழைக்காலத்தில் தான் அதிக நோய்தொற்றுகள் ஏற்படும். அப்படியாக மழைக்காலத்தில் என்னென்ன உணவுகளை சாப்பிடக் கூடாது என்றும், அவற்றை சாப்பிடக் கூடாததற்கான காரணங்களையும் பார்க்கலாம்.

உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்: மழைக்காலங்களில் தெருவோர உணவுகளையும், ஹோட்டல் உணவுகளுக்கும் நம் மனது ஏங்கும். ஆனால் அவ்வாறாக சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் மழைக்காலம் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளுக்கான காலம். மழைக்காலம் இவைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற காலம். நீரிலும் உணவிலும் வேகமாக பரவி நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். ஆகையால் உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எண்ணெய்யில் பொறித்த உணவுகளை தவிருங்கள்
எண்ணெய்யில் பொறித்த உணவுகளை தவிருங்கள்

பொறித்த உணவுகளை தவிருங்கள்: மழைக்கு இதமாக சூடான சமோசா, பக்கோடா போன்ற பொறித்த உணவுகள் நாவில் எச்சில் ஊற வைக்கும். அதை கட்டுப்படுத்தவே இயலாது. ஆகவே வீட்டில் தயாரித்த சமோசா, பஜ்ஜி மற்றும் பக்கோடா போன்றவற்றை மிதமான அளவில் சாப்பிட வேண்டும். ஏனெனில் மழைக்காலத்தில் பொதுவாகவே செரிமான கோளாறு ஏற்படும். அப்படியிருக்க எண்ணெய்யில் பொறித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது அஜீரணம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

இலை காய்கறிகளில் கவனம்
இலை காய்கறிகளில் கவனம்

கீரைகளில் கவனம்: இலை காய்கறியான கீரைகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை அதிகமாக காணப்படும். கீரைகளை வெட்டியப் பின் நன்கு கழுவ முடியாது என்பதால் அவற்றை அதிக வெப்பநிலையில் சமைக்க வேண்டும்.

கடல் உணவுகளில் கவனம்: மழைக்காலத்தில் நீர் மாசுபடுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. நீர் மாசுபாட்டால் மீன், இறால், நண்டு, கணவாய் போன்ற கடல் உயிரினங்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அவற்றை நாம் உண்ணுவதால் நமக்கும் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் மழைக்காலத்தில் கடல் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க: மழைக் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள்! ஒரே தீர்வு - இந்த 7 டிப்ஸா ஃபாலோ பண்ணுங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.