பொது கழிப்பறைகளை உபயோகித்துவிட்டு அவற்றை ஃப்ளஷ் செய்வதால் கரோனா வைரஸை கொண்ட துகள்கள் எழுந்து தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் பகீர் கிளப்பும் தகவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து 'Physics of Fluids' எனும் இதழில் வெளியான ஆய்வில் கழிப்பறையை உபயோகப்படுத்தும் நபர் அதனை ஃப்ளஷ் செய்தால் நீரில் இருக்கும் சிறு துகள்களில் இருக்கும் வைரஸ் வெறும் ஆறு வினாடிகளில் இரண்டு அடிவரை உயர்ந்து தொற்று இல்லாத அந்த நபரை தாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவில் பொது கழிப்பறைகளை பயன்படுத்தினால் தொற்று பரவும் அபாயம் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது. கரோனா குறித்த பிற ஆய்வுகளில் சிறுநீர், மலத்தில் இருந்து கூட தொற்று பரவல் நடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் தங்களது கழிவறைகளில் சிறுநீர் கழிக்கும்போது தொற்று அவர்களின் தொடைகளை 5.5 வினாடிகளில் சென்றடையும் அபாயம் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஃப்ளஷ் செய்யும் கழிப்பறைகளைவிட சிறுநீர் கழிப்பறைகள் ஆபத்தானவை என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க... ட்ரான்ஸ்பரன்டாக இருக்கும் ஜப்பான் பொது கழிப்பறைகள்!