ETV Bharat / sukhibhava

மூன்றாம் அலை- டெல்டா அறிகுறிகள் என்னென்ன? - கோவிஷீல்ட்

கரோனா பரவலின் மூன்றாம் அலை அச்சுறுத்தும் நிலையில், டெல்டா வைரஸின் மாறுபாடு அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

Delta variant
Delta variant
author img

By

Published : Jul 14, 2021, 7:01 PM IST

ஹைதராபாத் : நாட்டின் பல்வேறு இடங்களில் கரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்துவருகின்றன.

மறுபுறம், வைரஸ் மாறுபாடு அடைந்தவருகிறது. டெல்டா வைரஸ் வேறு மிரட்டிவருகிறது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.

முன்னெச்சரிக்கை அவசியம்

ஆகவே முகக்கவசம், கிருமிநாசினி கொண்டு கை சுத்திகரிப்பு, தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பு உள்ளிட்டவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும்.

Delta variant
கோவிட் கட்டுப்பாடுகள்

ஏனெனில், கரோனா வைரஸ்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக மரபணு மாற்றம் கொள்கின்றன. உதாரணத்துக்கு, பிரிட்டனில் ஒரு வேறுபாடு, தென் ஆப்பிரிக்காவில் ஒரு வேறுபாடு, இந்தியாவில் மற்றொரு வேறுபாடு என அறிகுறிகள் தென்படுகின்றன. இது மிக மிக ஆபத்தானது.

வைரஸ் பிறழ்வுகள் ஏன்?

உலக நாடுகள் கடந்த 18 மாதங்களாக கோவிட் வைரஸின் பிடியில் சிக்கியுள்ளன. அப்போதிலிருந்து வைரஸ் தன்னை மாற்றியமைத்துவருகிறது.

ஆரம்பத்தில், காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி வைரஸின் முக்கிய அறிகுறிகளாகக் காணப்பட்டன. ஆனால் இப்போது இவை மாறிக்கொண்டே இருக்கின்றன.

வைரஸ் பரவலின் வேகம், பரவும் முறை ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் நோயெதிர்ப்பு சக்தியும் மாறுபாடு அடைந்துவருகிறது.

டெல்டா மாறுபாட்டின் அறிகுறிகள்

டெல்டா மாறுபாடு பிரிட்டனில் பரவலாக உள்ளது. டெல்டா மாறுபாடு காரணமாக மக்களிடையே அறிகுறிகளைத் தொகுக்க சுகாதாரத் துறை ஒரு ஆய்வறிக்கை முறையை ஏற்பாடு செய்துள்ளது.

Delta variant
கோவிட் பரிசோதனை

தற்போது வரை ஜலதோஷம் கோவிட்டின் முக்கிய அறிகுறியாக கருதப்பட்டது. தற்போது, மூக்கு ஓழுகுவது ஒரு பொதுவான அறிகுறியாக இருக்கவில்லை.

ஆனால் தற்போது, டெல்டா மாறுபாட்டில் மூக்கு ஒழுகலும், தொண்டை வலியும் முக்கியமான அறிகுறியாக தெரிகிறது. இதேபோல், மற்ற முடிவுகளையும் நாம் மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.

இளசுகளே உஷார்- கோவிட் 3ஆம் அலை!

வைரஸில் புதிய மாறுபாடுகள் காரணமாக, இது தடுப்பூசிகளின் செயல்திறனை பாதிக்கலாம். சில தடுப்பூசிகள் புதிய வகை வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்படாது.

இருப்பினும், ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜென்கா தடுப்பூசிகள் மாறுபாடுகளிலும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் வைரஸ் பிறழ்வும் தொடர்ந்து நடைபெறுகிறது.

Delta variant
தடுப்பூசி

இந்தியா உள்பட கிட்டத்தட்ட 100 நாடுகளில் டெல்டா மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளதால், டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக போராட எந்த தடுப்பூசிகள் பொருத்தமானவை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இது தொடர்பான பல தடுப்பூசி நிறுவனங்கள் தங்கள் அறிக்கையை வெளியிட்டன. அதில் இந்திய தடுப்பூசிகள் மாறுபாடு அடைந்த வைரஸ்களை குணப்படுத்த சிறப்பாக செயல்படுகின்றன என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கோவிஷீல்ட் & கோவாக்சின்

கோவாக்சின் பெற்றவர்களிடமிருந்து ரத்த சீரங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அவைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் கோவாக்சின் சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது. அதாவது வைரஸிற்கு எதிரான சிறப்பான ஆன்டிபாடிகளை உருவாக்கியுள்ளது.

மேலும் முதலில் அடையாளம் காணப்பட்ட சார்ஸ் கோவிட்-2 (SARS-CoV-2) வகையை சேர்ந்த B.1.1.7 (ஆல்பா) மற்றும் B.1.617 (டெல்டா) உள்ளிட்ட வைரஸ் வகைகளுக்கு எதிராகவும், பிரிட்டன் மாறுபாடு வைரஸிற்கு எதிராகவும் திறம்பட செயலாற்றுகிறது.

இதேபோல், கோவிஷீல்ட் தடுப்பூசிகளும் வைரஸை எதிர்கொள்ளும் நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன. இது தொடர்பாக லா ஜொல்லா நிறுவனத்தின் (La Jolla Institute for Immunology- LJI) ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “12 வெவ்வேறு மாறுபாடு அடைந்த வைரஸ்கள் குறித்து ஆராய்ச்சிகள் நடத்திவருகிறோம். வைரஸ் பாதித்தோரிடமிருந்து செல்களை எடுத்தும், அது எவ்வாறு செயலாற்றுகிறது என்பது குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன” என்றனர்.

இதையும் படிங்க : ஆகஸ்ட்டில் கரோனா மூன்றாம் அலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.