ETV Bharat / sukhibhava

விரைவில் மூன்றாவது அலை- மாநிலங்களின் நிலை என்ன?

அடுத்த 6 அல்லது 8 வாரங்களில் கோவிட் பரவலின் மூன்றாவது அலை நாட்டை தாக்கும் என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இதை எதிர்கொள்ள மாநிலங்கள் தயார் நிலையில் உள்ளனவா என்று பார்க்கலாம்.

Covid third wave
Covid third wave
author img

By

Published : Jun 21, 2021, 3:14 PM IST

ஹைதராபாத்: கோவிட் பரவலின் மூன்றாவது அலை தொடர்பாக டெல்லியில் சனிக்கிழமை (ஜூன் 19) பேட்டியளித்த எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலேரியா, மூன்றாவது அலை என்பது தவிர்க்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோவிட் பரவலின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள மாநிலங்கள் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநகராட்சி மற்றும் மாநில அரசு கோவிட் பரவலின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள கோரேகான் மற்றும் மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் 700 மருத்துவ படுக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு

மாநிலத்தில் குழந்தைகள் மருத்துவ படுக்கைகள் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். ராஜிவ் காந்தி, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் 250 கூடுதல் மருத்துவ படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்காக ஒவ்வொரு மருத்துவமனைகளில் கூடுதலாக 100 அவசர சிகிச்சை படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகா

அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதி மற்றும் குழந்தைகள் சிகிச்சை மையம் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைகளிலும் கூடுதலாக 70-80 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை மையங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தெலங்கானா

மாவட்டந்தோறும் மருத்துவமனைகளில் குழந்தைகள் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் படுக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில், கூடுதலாக 1000 முதல் 1500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கேரளா

குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து கேரள மாநில அரசு அனைத்து மாவட்டங்களும் வழிமுறைகளை அனுப்பியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டால் நிபுணர்கள் சிகிச்சையளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குஜராத்

கோவிட் மூன்றாவது அலை குறித்து ஆமதாபாத் மாவட்ட வளர்ச்சி அலுவலர் அருண் மகேஷ் பாபு கூறுகையில், “குழந்தைகள் வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் படுக்கைகள் கூடுதலாக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற ஏற்பாடுகளுக்காக 20 குழந்தை மருத்துவமனைகள் உருவாக்க விவாதித்துவருகிறோம். மேலும் 14 குழந்தை மருத்துவ நிபுணர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 16 மருத்துவக் கல்லூரிகளிலும் குழந்தை மருத்துவப் பயிற்சி நடைபெற்று வருகின்றன” என்றார்.

டெல்லி

டெல்லியில் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் பொருட்டு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

மேலும் சிறப்பு சுகாதார நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஆக்ஸிஜன் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளை மூன்றாவது அலையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றார். கடந்த முறை டெல்லியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து காணப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: 6-8 வாரங்களில் மூன்றாவது அலை- எய்ம்ஸ் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.