டெல்லி: நாட்டில் இன்று புதிதாக 13,052 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 7 லட்சத்து 46 ஆயிரத்து 183 ஆக உள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து தேசிய அளவிலான மீட்பு 96.99 சதவீதமாக உள்ளது. இதுவரை வைரஸ் பாதிப்புக்கு ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 274 இறந்துள்ளனர். அதன்படி இறப்பு விகிதம் 1.44 சதவீதமாக உள்ளது.
மேலும் நாட்டில் தொடர்ந்து 12ஆவது நாளாக நாட்டில் கோவிட் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இந்தியாவில் கோவிட் பாதிப்பு கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23இல் 30 லட்சத்தையும், செப்டம்பர் 5இல் 40 லட்சத்தையும் தாண்டியது.
தொடர்ச்சியாக அக்டோபர் 11இல் 80 லட்சத்தையும், நவம்பர் 20இல் 90 லட்சத்தையும், டிசம்பர் 19இல் ஒரு கோடியையும் தாண்டியது. ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி நாட்டில் இதுவரை பரிசோதனைக்கு 19 கோடியே 65 லட்சத்து 88 ஆயிரத்து 372 மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஜனவரி மாதத்தில் மட்டும் 7 லட்சத்து 50 ஆயிரத்து 964 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மூடலின் விளிம்பில் 90 சதவீத ஹோட்டல்கள்- மத்திய பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு வரி விலக்கு கிடைக்குமா?