ETV Bharat / sukhibhava

கரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்படும் ஓசிடி நோயாளிகள்! - மனஅழுத்தம்

கரோனா காலத்தில் ஓசிடி எனப்படும் மன சுழற்சி நோய் உள்ளவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

COVID-19 can trigger OCD
COVID-19 can trigger OCD
author img

By

Published : Nov 10, 2020, 8:05 PM IST

கோவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் காரணமாக ஓசிடி எனப்படும் மன சுழற்சி நோய் உள்ளவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓசிடி என்றால் என்ன?

ஓ.சி.டி என்பது ஒரு மனநோயாகும். இது மீண்டும் மீண்டும் தேவையற்ற எண்ணங்கள் அல்லது உணர்ச்சிகளை (ஆவேசங்களை) ஏற்படுத்தும் ஒரு மனநோய். சிலருக்கு மீண்டும் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும். சிலருக்கு ஆவேசம், நிர்பந்தம் என இரண்டையும் ஏற்படுத்தும்.

ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

பி.எம்.சி மனநல மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளில், பெரியவர்களிடம் ஏற்படும் கரோனா தொற்றுக்கும் மனநல கோளாறுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.

இது குறித்து டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆசிரியர் ஜூடித் நிசென் கூறுகையில், "கரோனாவுக்கும் ஓசிடி தொற்றுக்கும் உள்ள தொடர்பை ஆராய்வது சுவாரஸ்யமானது. ஏனெனில் ஓசிடி என்பது பலவிதமான மருத்துவ வெளிப்பாடுகளைக் கொண்ட ஒரு மனகோளாறு. எனவே, இதுபோன்ற காலங்களில் மனம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை ஆராய வேண்டியது அவசியம்" என்றார்.

இந்த ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சியாளர்கள் ஏழு முதல் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கேள்வித்தாளை அனுப்பினர். அவர்களில் பெரும்பான்மையானோர் கடந்த ஒர் ஆண்டிற்குள் கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள்.

கரோனா காலத்தில் ஓசிடி எனப்படும் மன சுழற்சி நோய் உள்ளவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா பரிசோதனை - டாடாவின் புதிய சோதனை முறைக்கு ஒப்புதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.