ETV Bharat / sukhibhava

How to have sex during pregnancy: கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? கூடாதா? தம்பதிகளின் சந்தேகத்திற்கு, நிபுணர்களின் பதில் இங்கே.! - கர்ப்பத்தின்போது உடலுறவுக் கொள்வதால் நன்மைகள்

கணவன், மனைவி இடையே உடலுறவு தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில் அதில் முக்கியமானது கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? கூடாதா? என்பது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறிய சில முக்கியமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 4:24 PM IST

சென்னை: கணவன், மனைவி இடையே அன்பை வெளிப்படுத்திக்கொள்ள ஆயிரம் வழிகள் இருந்தாலும் அதில் மிக முக்கியமான ஒன்று உடலுறவு. இதை அருவருப்பானதாகவோ, வெளியில் பேசத் தயக்கம் கொள்ளும் விஷயமாகவோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் இந்த உடலுறவு குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் இருந்தாலும், கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? அல்லது கூடாதா? என்ற கேள்வியும், சந்தேகமும் ஏராளமான தம்பதிகள் மத்தியில் இருந்து வருகிறது.

ஆனால் இந்த சந்தேகத்தை மனத்தில் வைத்துப் புலம்பிக்கொள்ளும் அவர்கள், இது குறித்து மருத்துவரை அணுகி ஆலோசனை பெறத் தயங்கும் சமூகம் இன்றளவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த கர்ப்ப கால உடலுறவு குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறிய பொதுவான சில தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் உடலுறவு: கர்ப்ப காலத்தில் தம்பதிகள் உடலுறவு கொள்வதில் எந்த வித பிரச்சனையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த நேரத்தில் உடலுறவு கொள்வது தாயிக்கும், குழந்தைக்கும் மிக ஆரோக்கியமானது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், தாயின் வயிற்றில் அழுத்தம் ஏற்படாத வகையில் உடலுறவு கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால் ஆபத்தா? கர்ப்ப காலத்தில் உடலுறவுக் கொண்டால், கருச்சிதைவு ஏற்படும், குறை மாதத்தில் குழந்தை பிறக்கும் என்றெல்லாம் சொல்லிக்கேட்டிருப்போம். ஆனால் இவை முற்றிலும் தவறான கருத்து என மருத்துவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். நீங்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளும்போது பெண்களுக்கு யோனியில் அருகில் வலி மற்றும் அசவுகரியம் ஏற்படலாம், அது இயல்பான ஒன்றுதான். ஆனால் அதைத் தாண்டி எந்த வித பக்கவிளைவுகளோ அல்லது பிரச்சனைகளோ இல்லை என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆரோக்கியத்தில் தெளிவு பெருங்கள்: கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால், கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை சரியாக உள்ளதா? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் ஆனால், உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் சிறிதளவு சந்தேகமும் கொள்கிறீர்கள் என்றால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றபின் உடலுறவுக் கொள்ளுங்கள்.

தொற்று நோய் இருக்கிறதா? கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது ஆரோக்கியமான ஒன்றாக இருந்தாலும், உங்கள் துணைக்கு நோய்த் தொற்றோ அல்லது பால்வினை நோய்களோ இருந்தால் உடலுறவைத் தவிர்ப்பது சிறந்தது. சிலர் ஆணுறை அணிந்துகொண்டு உடலுறவு கொண்டால் தொற்று ஏற்படாது என நினைக்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு இந்த விஷயத்தில் சிக்கல்களை உருவாக்காமல் இருப்பது சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், உங்களுக்கு பால்வினை தொற்று மற்றும் வேறு நோய்த் தொற்றோ இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

கர்ப்ப காலத்தில் உடலுறவுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:

  • பெண்ணின் பிறப்புறுப்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தசைகள் வலுப்பெறும்.
  • உடலுறவு கொள்ளும்போது தம்பதிகள் இடையே அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும்.
  • கெட்ட கொழுப்புகள் கரைந்து கர்ப்பிணியின் ஆரோக்கியம் சிறக்கும்.
  • உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து நோய்த் தொற்றுகளில் இருத்து பாதுகாக்கப்படுவார்.
  • உடலுறவால், கணவன், மனைவி மற்றும் வயிற்றில் உள்ள குழந்தை மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் பெறுவர்.
  • ஆனால், உடலுறவுக்கு முன்பு கர்ப்பிணிப் பெண்ணின் உடல்நிலை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம்.

ஆபத்தான உடலுறவு:

  • பிறப்புறுப்பில் பாதிப்புள்ள கர்ப்பிணிகள்
  • இரட்டை குழந்தை கர்ப்பம் தரித்த பெண்கள்
  • கர்ப்பம் கலையாமல் இருக்கப் பிறப்புறுப்பில் தையல் போட்ட பெண்கள்
  • இரத்தபோக்கு, அதீத வெள்ளைபடுதல் உள்ளிட்ட சில பிரச்சனைகள் உள்ள பெண்கள்
  • குழந்தைப் பருவத்தில் கருவுற்ற பெண்கள்

இப்படிப் பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப் பெண்கள் உடலுறவு கொள்ளக்கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கர்ப்பிணிப் பெண் எவ்வளவு ஆரோக்கியமானவராக இருந்தாலும், அவருக்கு வசதியாகவோ அல்லது விருப்பமாகவோ இருக்கும் வரை மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும். உடலுறவின்போது அதீத வலியோ அல்லது இரத்தப்போக்கோ ஏற்பட்டால் தயக்கம் கொள்ளாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: அரிசி சாப்பாட்டுக்கும், உடல் எடைக்கும் சம்பந்தமே இல்ல: நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.