ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் மாரடைப்பு, இரத்த நாள அடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்னைகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக உடலின் இரத்த நாளத்தில் உள்ள உட் கொலுப்பு, கால்சியம் போன்ற படிவுகள் உருவாகி இரத்த ஓட்டம் உடலுக்கு செல்லாமல் இரத்த நாள அடைப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக உடலுக்கு இரத்தை எடுத்துச் செல்லும் பெருநாடி இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. இந்த படிவுகள் உண்டாவதால் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
பொதுவாகவே உணவில் அதிகளவில் காய்கறிகளை சேர்த்துக்கொள்வதால் இரத்த ஓட்டத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் ப்ராக்கோலி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை உணவு அட்டையில் சேர்த்துக்கொண்டால் இரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு இல்லாமல் போகும். காரணம் இதில் உள்ள வைட்டமின் கே தானாம்.
வயது மூத்த பெண்களுக்கு ப்ராக்கோலி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் கொடுக்கப்பட்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் 46 விழுக்காடு பெண்களுக்கு இரத்த நாள அடைப்போ, மாரடைப்போ ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே இருந்துள்ளது.
எனவே இதுபோன்ற காய்கறிகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொண்டால் லாக்டௌனால் (கரோனா பொதுஅடைப்பு) வாடிபோயிருக்கும் இதயத்துக்கு பேருதவியாக இருக்கும்.
இதையும் படிங்க... சுவையான சேப்பக்கிழங்கு மசாலா சாட் - செஞ்சி பாருங்க வித்தியாசமா உணர்வீங்க!