ETV Bharat / sukhibhava

2020ஆம் ஆண்டில் கரோனா ஏற்படுத்திய தாக்கம் : ஒரு சிறு பார்வை - கரோனா

கரோனாவின் பின் விளைவுகள் எவ்வாறு இருக்கப்போகிறது எனும் சிந்தனை மருத்துவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் கவலையடையச் செய்துள்ளது. விரைவில் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சந்தைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் தற்போதைய உருமாற்றம் தடுப்பூசியின் செயல்திறனை கேள்விக்குள்ளாகி உள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Dec 25, 2020, 5:55 PM IST

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டு இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் லண்டனிலிருந்து வீரியம் மிக்க கரோனா வைரஸ் தற்போது பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் பயம் இன்னும் அதிகரித்தே காணப்படுகிறது. வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் ஆபத்தான விகிதத்தில் மக்கள் உயிரிழந்த வண்ணம் இருந்தனர்.

ஆனால் இப்போது நோயை எவ்வாறு கையாள்வது என மருத்துவர்கள் ஓரளவுக்கேனும் அறிந்து வைத்துள்ளனர். இருந்தபோதிலும் , கரோனாவின் பின் விளைவுகள் எவ்வாறு இருக்கப்போகிறது எனும் சிந்தனை மருத்துவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் கவலையடையச் செய்துள்ளது.

விரைவில் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சந்தைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், வைரஸின் தற்போதைய உருமாற்றம், அதன் தீவிரத்தன்மை, விளைவுகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் தடுப்பூசியின் செயல்திறன் கேள்விக்குள்ளாகி உள்ளது.

கரோனா வைரஸில் தாக்கமும் அதன் விளைவுகளும் உடலின் எல்லாப் பகுதிகளிலும் சில கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. சுவாசம் குறித்த செயல்பாடுகள், செரிமான செயல்பாடுகள், நரம்பு மண்டலம் என அனைத்தும் கரோனாவால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. இருப்பினும் இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடுகின்றன.

இச்சூழலில், 2020ஆம் ஆண்டின் கரோனா நாட்குறிப்பில் இருந்து, ஈடிவி பாரத் சுகிபாவா குழு இந்த அபாயகரமான நோய் மற்றும் அதன் விளைவுகள் தொடர்பான தகவல்களை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறது.

உலகளாவிய தொற்றுநோய் கோவிட்-19

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்டார். மக்கள் பயணம் மேற்கொள்ள, படிப்படியாக கரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. இந்த வைரஸிற்கு ஆரம்பத்தில் 'SARS-CoV-2' என்று பெயரிடப்பட்டது, இது பின்னர் கோவிட் -19 (கோவிட் -12480019) அல்லது கரோனா வைரஸ் என அழைக்கத் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், இருமல், சளி, அதிக காய்ச்சல் ஆகியவை கரோனா அறிகுறிகளாகக் கருதப்பட்டன. ஆனால் நோயின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியதும் ​​அறிகுறிகள் மாறுபடத் தொடங்கின. மூச்சுத் திணறல், வாசனை, சுவை இழப்பு ஆகியவையும் பட்டியலில் சேர்க்கப்பட்டன. பட்டியல் தொடர்ந்து, ​​வயிற்றுப்போக்கு, தலை வலி, உடல் வலி, தீவிர சோர்வு, பலவீனம் ஆகிய அறிகுறிகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இந்த ஆண்டு கரோனா காரணமாக ஏராளமான மக்கள் உயிர் இழந்த நிலையில், வரலாற்றில் ஏற்பட்ட பேராபத்து நிறைந்த தொற்றுநோயாக கரோனா உருவெடுத்துள்ளது. இந்த நோய் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றியுள்ளது. தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், முகக்கவசங்கள் அணிவதும், சானிடைசர்கள் உபயோகிப்பதும் இன்றியமையாததாக மாறியுள்ளது.

நோயாளிகளின் மீதான கரோனாவின் தாக்கம்

இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களின் ஆரோக்கியத்தில் கரோனா தொற்று மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா நோயெதிர்ப்பு மண்டலத்தை நேரடியாக தாக்கும் நிலையில், ஏற்கனவே நோயெதிர்ப்பில் சமரசம் செய்து கொண்டுள்ள இவர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

2020 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, இதய நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 20 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் அதிக எண்ணிக்கையிலான மாரடைப்பு இறப்புகள் நிகழ்ந்துள்ளன. புள்ளிவிவரங்களின்படி, இதய நோய் 16 இறப்புகளை நிகழ்த்தியுள்ளது.

நுரையீரல் மற்றும் சுவாச அமைப்பில் ஏற்படும் பாதிப்புகள்

தொடக்கம் முதலே, சுவாச அமைப்பு மற்றும் நுரையீரலுடன் தொடர்புடைய ஒரு நோயாகவே கரோனா கருதப்படுகிறது. ஏனெனில் அதன் அறிகுறிகள் பன்றிக் காய்ச்சல், நிமோனியா போன்ற நோய்களை ஒத்தும், பாதிக்கப்படுவோரின் நுரையீரலில் பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

கரோனாவால் பாதிக்கப்படுவர்களுக்கு சுவாசப் பிரச்னைகள், கடுமையான நுரையீரல் நோய்கள் ஆகியவை பதிவாகின. விளைவாக, மக்களின் நுரையீரல் அதன் சுவாச மற்றும் எரிவாயு பரிமாற்ற செயல்பாடுகளை நிறுத்தியது. மக்களுக்கு கூடுதல் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல், கரோனா தொற்றிலிருந்து மீண்ட பின்னரும்கூட, மக்களின் சுவாச அமைப்புகளில் கடுமையான நீண்டகால பின்விளைவுகள் ஏற்பட்டு வருவது கவலைக்குரிய ஒன்றாகும்.

செரிமான அமைப்பு மற்றும் கணையத்தில் ஏற்படும் விளைவுகள்

நுரையீரலை மட்டுமல்ல, கரோனா, பல நோயாளிகளின் பசி ஆற்றலையும் பாதித்தது. நோய் எதிர்ப்பு சக்தியோடு, செரிமான அமைப்பு, குடல், கல்லீரல் ஆகிய உறுப்புகளும் பலவீனமடைந்தன. இதன் விளைவாக, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, சுவை இழப்பு போன்ற பிரச்சினைகளை மக்கள் சந்திக்க நேரிட்டது. மேலும், கரோனா காரணமாக இரைப்பை மற்றும் செரிமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் பல நோயாளிகளுக்கு பசியின்மை மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளன.

மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்

கரோனாவின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று நமது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வைரஸின் தாக்கத்தால் சுவை, வாசனை ஆகிய உணர்வுகளை இழப்பது. தவிர, நரம்புகளில் வலி, வீக்கம், ரத்த உறைவு, தொடர்ச்சியான அல்லது தீவிரமான தலைவலி போன்றவற்றையும் கரோனா ஏற்படுத்தியது. ஒற்றைத் தலைவலியும் அறிகுறிகளில் தென்பட்டது. தவிர, கரோனாவிலிருந்து மீண்டு வந்த ஏராளமானோரின் மூளையில் சுவை மற்றும் வாசனனைத் திறனைக் கட்டுப்படுத்தும் பகுதிக்கு நிரந்தர சேதம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதிகரித்த சிறுநீரக நோய்கள்

கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களின் சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டயாலிசிஸ் உடனடியாகத் தேவைப்படும் நிலைக்கு பெரும்பாலானோர் தள்ளப்பட்டனர். பொதுவாக ஏதேனும் தொற்று காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படும்போதோ அல்லது டயாலிசிஸ் தேவைப்பட்டாலோ, மூன்று நாள்கள் முதல் மூன்று வாரங்களுக்குள் அவர்கள் குணமடைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு, கடுமையான சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் கவலைக்குரிய பிரச்சினை என்னவென்றால், கரோனாவின் பக்க விளைவுகள் காரணமாக, சிறுநீரக நோயாளிகளுக்கு நீண்டகால நாள்பட்ட டயாலிசிஸ் தேவைப்படலாம் என்றும், எதிர்காலத்தில் அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டு முழுவதும் தொடர்ந்த மனநலப் பிரச்சினைகள்

கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலே மக்களின் மனதில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.நோய் குறித்த அச்சங்கள், நிலையற்ற பொருளாதாரம், வேலையின்மை, எதிர்காலம், கல்வி அல்லது இறப்பு ஆகியவை குறித்த அச்சங்கள், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் ஆண்டு முழுவதும் சந்தித்த மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை மக்களின் மனநலனில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்களாக தொடங்கி, பொது மக்கள் வரை, வயதி சிறியவர் தொடங்கி பெரியவர் வரை இந்த ஆண்டு ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நிகழந்துள்ளன.

இது அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மனநல மருத்துவர்களின் உதவியுடன் மக்களுக்கு ஆன்லைன் உதவிகள் வழங்க வழிவகுத்தது. ஆன்லைன் கவுன்சிலிங் நிகழ்வுகள் நிபுணர்களால் நடத்தப்பட்டன. 2020ஆம் ஆண்டில் மட்டும் மனநல மருத்துவர்களிடமிருந்து உதவி கோரும் நபர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு மக்களுக்கு மிகவும் கடினமான சவால்களை அச்சுறுத்தல்களையும் அளித்துள்ளது. பலரும் தங்கள் நெருங்கிய மற்றும் அன்பிற்குரியவர்களை இழந்தனர், பலர் வேலைவாய்ப்புகளையும் வீடுகளையும் இழந்தனர். ஆனால், வரும் 2021ஆம் ஆண்டு மக்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாய் அமையும் என்று நம்புகிறோம். இருந்தபோதிலும், அனைவரும் தடுப்பூசியைப் பெறும், வரை அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்படுவதே இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.