விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் கீழரத வீதியைச் சேர்ந்தவர் லட்சுமி (40). இவர், அப்பகுதியிலுள்ள ஏடிஎம்-இல் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, இளைஞர் ஒருவர் அவருக்கு உதவுவதுபோல் நடித்து 20 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளார். இதேபோல், இரண்டு நாள்களுக்குப் பிறகு கீழத்தெருவைச் சேர்ந்த வெள்ளையப்பன் என்பவரிடமும் ஏமாற்றி அதே ஏடிஎம்-இல் 50 ஆயிரம் ரூபாய் திருடியுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்த நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக மோசடி நடத்த ஏடிஎம்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், தேனி மாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்த தம்பிராஜ் என்பவர் நூதன முறையில் திருடியது தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்து நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இவர் இதுபோல ஸ்ரீவில்லிபுத்துார், சாத்தூர், ராஜபாளையம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏடிஎம்-இல் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுபோல் நடித்து அவர்கள் வைத்திருக்கும் ஏடிஎம் கார்டுகளை மாற்றி பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட தம்பிராஜ் என்ற நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஏடிஎம்-ஐ சேதப்படுத்திய போதை ஆசாமி: போலீசார் விசாரணை