விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியினை கடந்தாண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த கட்டடத்தின் பணிகள், இறுதிக்கட்டத்தை தற்போது நெருங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று (மே.18), குல்லூர்சந்தையைச் சேர்ந்த பிரபாகரன் (28) என்பவர், அந்தக் கட்டிடத்தின் 4ஆவது மாடியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக, அருகிலிருந்தவர்கள் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இவ்விபத்து குறித்து சூலக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.