ETV Bharat / state

விருதுநகரில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் மறியல்! - விருதுநகரில் குடிநீர் வழங்காததை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பெண்கள்

விருதுநகர்: ஏடிபி காம்பவுண்டில் 15 நாள்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் புல்லலக்கோட்டைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
author img

By

Published : May 12, 2020, 11:33 AM IST

விருதுநகர் நகராட்சி நிர்வாகம் விருதுநகர் நகர்ப் பகுதியில் 15 நாள்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்துவருகிறது. இவ்வாறு பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் ஏடிபி காம்பவுண்டில் இன்றோடு 15 நாள்களாகியும் குடிநீர் வழங்கவில்லை. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் விருதுநகர் புல்லக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து பேசி, குடிநீர் முறையாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் உறுதி அளித்ததின்பேரில் பெண்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: சுகாதார ஆய்வாளரைத் தாக்கிய நபரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.