ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான அத்திகோயில், கான்சாபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா விவசாயமே பிரதானமாக நடந்து வருகிறது.
இங்கு மலைப் பகுதியில் இருந்து இறங்கும் காட்டு யானைகள் தொடர்ந்து தோப்புக்குள் நுழைந்து மரங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், தர்மலிங்கம் என்பவருக்குச் சொந்தமான தோப்பில் புகுந்த காட்டு யானை தென்னை , மா மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்து அட்டகாசம் செய்துள்ளன.
தொடர்ந்து இது போன்று காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதாகவும் வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கவும் காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுகவினரால் தாக்கப்பட்ட பெண் விஏஓ - அதிர்ச்சியைக் கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!