விருதுநகர் மாவட்டம் ஆா்.ஆா்.நகா் அருகே கன்னிசேரியில் அர்ஜுனா ஆறு உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக இரவு பகலாக மணல் திருட்டு நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடா்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து விருதுநகர் காவல் துணை கண்காணிப்பாளா் ஏ.எஸ்.பி.சிவபிரசாத் தலைமையிலான தனிப்படையினா் மணல் திருடுபவர்களை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கன்னிசேரி பகுதி அா்ஜூனா ஆற்றுப்பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த சூலக்கரை பகுதியைச் சேர்ந்த பழனிசாமி (52) என்பவரை காவல்துறை கைது செய்தனா்.
மேலும், மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம், இரண்டு டிப்பர் லாரி உள்பட 6 கனரக வாகனங்களை பறிமுதல் செய்து வச்சக்கரப்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னா் பழனிசாமி மீது மணல் கடத்தல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த வச்சக்கரப்பட்டி காவல்துறை அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.