விருதுநகர் மாவட்டத்தில் கரோனோ பரவலைத் தடுக்க தீவிரமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிவகாசி தேரடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி நுழைவாயில் கூடத்தை பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், “கரோனோ பரவலைத் தடுக்க பொதுமக்கள் போதுமான ஒத்துழைப்பைத் தருகிறார்கள். சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை போன்ற பல்வேறு துறை அலுவலர்களின் செயல்பாடுகள் போற்றத்தக்க வகையில் உள்ளது. வல்லரசு நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கரோனோ கட்டுப்பாட்டில் உள்ளதற்கு காரணம் மத்திய அரசு எடுத்த தீவிர நடவடிக்கையே ஆகும்.
தேசியத்தையும் தெய்வீகத்தையும் உலகிற்கு பறைசாற்றி அரசியல் நடத்திய முத்துராமலிங்கத் தேவரின் வழியில் பிரதமர் மோடி தெய்வீக வழியில் தேசிய உணர்வை ஊட்டுகிறார். கரோனோ தடுப்பில் பிரதமர், முதலமைச்சரின் நடவடிக்கைகளை கேலி கிண்டல் பேசுவோர் சமூக விரோதிகள்” என்றார்.
இதையும் படிங்க...அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உத்தரவு!