விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் அருண் குமார்(26). இவர் அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். அந்தப் பெண் இவருடைய காதலை ஏற்க மறுத்ததையடுத்து கடந்த வருடம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சிசெய்தார். இந்நிலையில் ஊர் பெரியோர்கள் இதுபோன்ற சம்பவம் நடக்க கூடாது என இரு வீட்டாரையும் அழைத்து சமரசம் பேசி முடித்துள்ளனர்.
இந்நிலையில் அருண் குமார் காதலித்து வந்த பெண் கடந்த 10ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண்ணிடம் அருண் குமார் கூறியுள்ளார். அதை அவர் ஏற்க மறுத்த நிலையில் இளைஞர் தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அருண் குமாரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் 60 சதவிகித தீ காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி காதலர் தினத்தன்று உயிரிழந்தார்.
இதையும் படிங்க: காதலை கைவிட மறுத்த இளைஞர் குத்திக் கொலை