விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. விவசாயியான இவர் சொந்தமாக தென்னந்தோப்பு வைத்துள்ளார். தோப்பிலிருந்து தேங்காய்களை வெட்டி அதனை டிராக்டரில் போட்டுக்கொண்டு குணவந்தனேரி கண்மாய் கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக டிராக்டர் கவிழ்ந்து, கண்மாய்க்குள் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் புகழேந்தி, கம்மாயில் வேலை செய்து கொண்டிருந்த ஏழு பெண்கள் உள்பட எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இலங்கேஸ்வரி, பாண்டி லட்சுமி ஆகிய இருவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டிருந்ததால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து கூமாபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: டிராக்டர் மீது லாரி மோதி விபத்து - லாரி ஓட்டுநர் உயிரிழப்பு!