ETV Bharat / state

நோபிள் வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பிடித்த மாணவன் - எதற்கு தெரியுமா? - Virudhunagar School Student Achievement

விருதுநகர்: சக்கராசனம் செய்தபடி 50 மீட்டர் தூரம் காரை இழுத்து சென்ற பள்ளி மாணவன் நோபிள் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

student pulling the car
student pulling the car
author img

By

Published : Dec 3, 2020, 7:49 PM IST

விருதுநகரை சேர்ந்தவர் தனியார் பள்ளி மாணவன் ஆர்.ஷியாம் கணேஷ் அங்குள்ள தனியார் பள்ளியில் பதினோறாம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும், யோகாசனத்தில் தேசிய அளவில் இரண்டு பதக்கங்களை பெற்றிருக்கும் அவர், உலகளவில் இரண்டு சாதனைகளும் படைத்துள்ளார். இதற்காக தமிழ்நாடு அரசு இவருக்கு 1.5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கியது.

இந்நிலையில் இன்று(டிச.3) 850 கிலோ எடையுள்ள கார் ஒன்றை கயிற்றால் கட்டி தனது இடுப்பில் இணைத்து சக்கராசனம் செய்தபடியே 50 மீட்டர் தூரம் இழுத்து சென்று மேலும் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக இது போன்ற சாதனையை யாரும் செய்யாததால் ஷியாமின் சாதனை, நோபிள் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றது.

காரை இழுக்கும் மாணவன்

இதற்கான சான்றிதழை அந்த நிறுவனத்திலிருந்து வந்திருந்த நடுவர் திலிபன் வழங்கினார். சாதனை செய்த மாணவனை அவரின் பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர். இந்த சாதனை நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'ராமருக்கு அணில்போல் நான் இருப்பேன்' தமிழருவி மணியன் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.