ETV Bharat / state

தவறவிட்ட பையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த ரயில்வே காவல் துறையினர்!

author img

By

Published : Nov 9, 2019, 6:41 PM IST

விருதுநகர்: மதுரையைச் சேர்ந்த மகேஷ்குமார் அந்தியோதயா ரயிலில் தவறவிட்ட பை, அதிலிருந்த மூன்று சவரன் தங்க நகை, ரூ.7,200 ரொக்கத்தை விருதுநகர் ரயில்வே காவலர்கள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

virudhunagar railway police rescue the bag

மதுரையைச் சேர்ந்த மகேஷ் குமார் தனது குடும்பத்துடன் மதுரையிலிருந்து திருச்செந்தூர் செல்வதற்காக மதுரை ரயில் நிலையத்தில் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், தவறுதலாக நாகர்கோவில் நோக்கிச் செல்லும் அந்தியோதயா ரயிலில் ஏறியுள்ளார்.

பின்னர், அவசரமாக கீழே இறங்கி ரயில் மாறியபோது தனது கறுப்பு நிற பையை அந்தியோதயா ரயிலில் மறத்துவைத்துவிட்டு இன்டர்சிட்டி விரைவு ரயிலில் ஏறியுள்ளார்.

சிறிது நேரம் கழித்துதான் வைத்திருந்த பையை அந்தியோதயா ரயிலில் விட்டுவிட்டு வந்ததை அறிந்த அவர் மதுரை ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரில் பையில் மூன்று சவரன் மதிப்புள்ள தங்க வளையல், ரூ.7,200 ரொக்கம் உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து விருதுநகர் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் வந்த அந்தியோதயா விரைவு ரயிலிலை விருதுநகர் ரயில்வே காவல் துறையினர் சோதனை செய்து மகேஷ்குமார் தவறவிட்டதாகக் கூறிய பையை மீட்டனர்.

பயணி ரயிலில் தவறவிட்ட பையை மீட்ட விருதுநகர் ரயில்வே துறையினர்

பின்பு மகேஷ்குமார் விருதுநகர் ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் தான் தவறவிட்ட பை, தங்க நகை, ரொக்கப் பணத்தை உரிய அடையாளத்தைக் கூறி பெற்றுக் கொண்டார்.

விருதுநகர் ரயில்வே காவல் துறையினர் விரைவாகச் செயல்பட்டு பையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து ரயில்வே காவல் துறையினரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கருத்து!

Intro:விருதுநகர்
09-11-19

அந்தோதயா ரயிலில் தவற விட்ட பையை விருதுநகர் ரயில்வே போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்

Tn_vnr_03_railway_police_rescue_bag_vis_script_7204885Body:மதுரையை சேர்ந்த மகேஷ்குமார் அந்தோதயா ரயிலில் தவற விட்ட பையிலிருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ 7200 ரொக்கப்பணத்தை விருதுநகர் ரயில்வே போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்

மதுரையைச் சேர்ந்த மகேஷ் குமார் தனது குடும்பத்துடன் மதுரையில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்காக மதுரை ரயில் நிலையத்தில் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்தார் ஆனால் தவறுதலாக நாகர்கோவில் நோக்கி செல்லும் அந்தியோதயா ரயில் ஏறியுள்ளார்.
பின்னர் அவசரமாக கீழே இறங்கி ரயில் மாறியபோது தனது கருப்பு நிற பையை அந்தோதயா ரயிலில் மறந்து வைத்துவிட்டு இன்டர்சிட்டி விரைவு ரயிலில் ஏறியுள்ளார். பின்பு தான் வைத்திருந்த பையை அந்தோதயா ரயிலில் விட்டு விட்டு வந்ததை அறிந்த அவர் மதுரை ரயில்வே காவல் துறையில் புகார் அளித்தார். பையில் 3 பவுன் மதிப்புடைய தங்க வளையல் மற்றும் ரூ 7200 ரொக்கப் பணம் உள்ளது என புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து விருதுநகர் ரயில்வே காவல் துறைக்கு மதுரை ரயில்வே போலீசார் அளித்த தகவலின் பெயரில் விருதுநகர் வந்த அந்தியோதயா விரைவு ரயிலிலை விருதுநகர் ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்து மகேஷ்குமார் தவறவிட்டதாக கூறிய பையை மீட்டு
அதில் இருந்த நகை மற்றும் பணத்தை
பாதுகாப்பாக மீட்டு மதுரை ரயில்வே காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டு மகேஷ்குமார் விருதுநகர் ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் தான் தவறவிட்ட பேக் மற்றும் தங்க நகை ரொக்கப் பணத்தை உரிய அடையாளத்தை கூறி பெற்றுக் கொண்டார். விருதுநகர் ரயில்வே காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு பையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தை தொடர்ந்து ரயில்வே காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.