ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பது தெரியவந்தது. அவருடைய பையை சோதனை செய்ததில் அதில் ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவலர்கள் உடனடியாக அதனை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த கஞ்சாவை பெற்றுக் கொள்ள வந்த ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவரையும், காவலர்கள் மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து சேத்தூர் ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையில், காவல் துறையினர் கைதான இருவரிடமும் கஞ்சா எவ்வாறு கிடைத்தது? இதன்பின் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் கஞ்சா வழக்கில் கைது!