விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலையில், நான்கு தினங்களுக்கு முன்பு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 20 பேர் உயிரிழந்தனர், 26 பேர் படுகாயங்களுடன் சாத்தூர், சிவகாசி, மதுரை, தூத்துக்குடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்துக்கு காரணமான பட்டாசு ஆலை உரிமையாளர் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி, பிரதான குத்தகைதாரர் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல், உள் குத்தகைதாரர்களான கீழ செல்லையாபுரத்தைச் சேர்ந்த பொண்ணுப் பாண்டி, ராஜா, வேல்ராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு உள்குத்தகைதாரரான பொண்ணுப் பாண்டி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், பிரதான குத்தகைதாரரான சக்திவேலை ஏழாயிரம்பண்ணை காவலர்கள் இன்று (பிப்ரவரி 16) கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கிய அமைச்சர்