விருதுநகர் மாவட்டத்தில் கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 884 நபர்களில், 2 ஆயிரத்து 950 பேரிடம் இருந்து 60 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் நேற்று (செப்.30) பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது, 'பிரதமரின் கிசான் திட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் விருதுநகர் மாவட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 149 நபர்களும், வெளிமாவட்ட நபர்கள் ஆயிரத்து 735 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் 2 ஆயிரத்து 950 பேரிடமிருந்து, ரூ.60 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 934 நபர்களிடம் இருந்து 11.58 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.