ETV Bharat / state

பள்ளிக்குச் சென்ற சிறுமி சாலை விபத்தில் உயிரிழப்பு - School girl dies in accident Virudhachalam

கடலூர்: பள்ளிக்கு மிதிவண்டியில் சென்ற மாணவி கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

School girl accident
School girl accident
author img

By

Published : Mar 3, 2020, 8:35 AM IST

விருத்தாசலம் அடுத்த ஐவதுகுடி சமத்துவபுரத்தைச் சேர்ந்த மாணவி புவனா (15), இவரும் இவருடைய தோழியுமான சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா என்பவரும் ஐவதுகுடி அருகே உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகின்றனர்.

இன்று காலை இருவரும் மிதிவண்டியில் பள்ளிக்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து நைனார்பாளையம் நோக்கி வந்த டாடா சுமோ கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, புவனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த சிறுமி

இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீவித்யா சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். விபத்து குறித்து வேப்பூர் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.