விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பிளவக்கல் பெரியார் அணை உள்ளது. இந்த அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரானது, அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகளின் பாசன வசதிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த அணையில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் வளர்ந்தபின், அதைப்பிடித்து விற்பனையும் செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில், வட கிழக்குப் பருவமழை காரணமாக ஓரளவிற்கு அணை நிரம்பிய அணையின் நீர் இருப்பு, தற்போது வற்றி காணப்படுகிறது.
கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தால் அணையைச் சுற்றி கரையோர பகுதியில் இன்று ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதைக் கண்ட மீன்பிடி விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அதிகாரிகள் முறையாக மீன்பிடிக்க அனுமதிக்காததே மீன்கள் இறப்பிற்கு காரணம் என வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் பிளவக்கல் அணையில் செத்து மிதந்த மீன்கள்! - பிளவக்கல் அணை
விருதுநகர்: வெயிலின் தாக்கத்தால் ஸ்ரீவில்லிபுத்துார் பிளவக்கல் அணையைச் சுற்றி கரையோரப் பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனைக்கண்டு மீன்பிடி விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.