ETV Bharat / state

பட்டா மாறுதலுக்கு கையூட்டுப் பெற்ற விஏஓ கைது - பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ. புதுப்பட்டியில் பட்டா மாறுதலுக்கு கையூட்டுப் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைதுசெய்யப்பட்டார்.

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

author img

By

Published : Dec 30, 2020, 1:33 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ. புதுப்பட்டி கிராமத்தில் பசும்பொன்தேவர் தெருவைச் சேர்ந்த மகேந்திரன். அவரது தந்தை சுந்தர்ராஜன் இறந்த நிலையில் சுந்தர்ராஜன் பெயரில் உள்ள பட்டாவை மகேந்திரன் பெயருக்கு மாற்றுவதற்கு வ. புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சிவராமலிங்கத்திடம் கடந்த வாரம் மனு கொடுத்துள்ளார்.

தொடர்ந்து அலுவலகத்திற்குச் சென்று பட்டா மாறுதல் கேட்டதற்கு ரூபாய் 3000 பணம் கொடுத்தால் மட்டுமே மாற்றித் தரப்படும் என்று மகேந்திரனிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மகேந்திரன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்குச் சென்று கிராம நிர்வாக அலுவலர் மீது புகார் கொடுத்துள்ளார்.

இதனடிப்படையில் மகேந்திரனிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பியுள்ளனர். பின்னர் வ. புதுப்பட்டி வந்த மகேந்திரன் கிராம நிர்வாக அலுவலகம் சென்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவராமலிங்கத்திடம் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையிலான பூமிநாதன், விமலா ஆகிய இரண்டு ஆய்வாளர்கள் வந்து சிவராமலிங்கத்தை கையும் களவுமாகப் பிடித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து அரசு அலுவலகங்கள் (விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம்) எனத் தொடர்ந்து அலுவலர்கள் கையூட்டுப் பெற்று கைதாகிவருவது தொடர் கதையாகிவருகிறது. இதனால் பொதுமக்கள், அலுவலர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.