விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அண்ணா நகர் பகுதியில் டைல்ஸ் கடை அமைப்பதற்காக புதியதாக கட்டட வேலை நடைபெற்று வந்தது. பல்வேறு தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது கட்டடத்தில் கான்கிரிட் முட்பிரிக்கும்போது கட்டடத்தின் முன் பகுதியில் இருந்த சுவர் சரிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த ஆணைகூட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி (40) கொத்தனார், கட்டட உரிமையாளரின் மகன் டயான்ராஜ் (24) உள்பட இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்கல.. கேட்ட ஊழியர்களை தாக்கிய வாடிக்கையாளர்கள்