ETV Bharat / state

'சண்டியர் அமைச்சர்' - கேடிஆரை சாடிய டிடிவி! - TTV Dhinakaran campaign in Sattur

'இந்த மாவட்டத்தில் ஒரு சண்டியர் அமைச்சர் உள்ளார். அவருடைய சண்டியர்தனத்தால் அமைச்சர் பதவியின் மாண்பையே கெடுத்துவிட்டார்' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை டிடிவி தினகரன் மறைமுகமாக விமர்சித்தார்.

சாத்தூரில் டிடிவி தினகரன் பரப்புரை
சாத்தூரில் டிடிவி தினகரன் பரப்புரை
author img

By

Published : Apr 1, 2021, 9:51 AM IST

விருதுநகர்: சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மனை ஆதரித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்குராந்தல் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இன்று நடக்கின்ற ஆட்சி துரோக ஆட்சி. இந்த மாவட்டத்தில் ஒரு சண்டியர் அமைச்சர் உள்ளார். அவருடைய சண்டியர்தனத்தால் அமைச்சர் பதவியின் மாண்பையை கெடுத்துவிட்டார்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறைமுகமாக விமர்சித்தார்.

சாத்தூரில் டிடிவி தினகரன் பரப்புரை

கஜானாவை காலிசெய்த பழனிசாமி

தொடர்ந்து பேசிய அவர், "ஆர்.கே. நகரில் அதிமுக ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டினார்கள். இந்த ஆட்சியில் தற்போது எடப்பாடி பழனிசாமி கஜானாவை காலி-செய்துவிட்டார். இதனால் தமிழ்நாடு அரசு ஆறு லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை. தொழில் இல்லை. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

மேலும் அதிமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் தேர்தல் அறிக்கையாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியார் பள்ளிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் தனியாக நலவாரியம் அமைத்திட நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.